Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிரஞ்சீவி குடும்பத்தில்.. இப்படி ஒரு கிரிக்கெட் வெறியரா? ஒரே போட்டோ.. மொத்த அன்பையும் கொட்டியாச்சு

ஹைதராபாத்: தெலுங்கு சினிமா உலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் குடும்பத்தில் ஒருவர் மிகத் தீவிரமாக கிரிக்கெட் ரசிகராக இருக்கிறார். எந்தளவுக்கு என்றால், நாளை உலக டெஸ்ட் ஸாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடப் போகும் அணிக்காக, இவர் ஒரு தனி ஃபோட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

நாளை (ஜூன்.18) இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் களமிறங்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தயாராகி வருகிறது.

அதேசமயம், நியூசிலாந்து அணியும் முதன்முறை நடக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை எப்படியாவது தட்டித்தூக்கிவிட வேண்டும் என்று ரெடியாக உள்ளது.

 தெலுங்கு சினிமா

தெலுங்கு சினிமா

இந்நிலையில், தெலுங்கு உலகில் வளர்ந்து வரும் ஹீரோவாக இருக்கும் சாய் தரம் தேஜ் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவைப் பொறுத்தவரை சிரஞ்சீவி குடும்பம், என்.டி.ஆர் குடும்பம், நாகர்ஜுனா குடும்பம் என்று குடும்பம் குடும்பமாக அந்த இண்டஸ்ட்ரியை ஆண்டு வருகின்றனர். இதில், சிரஞ்சீவி குடும்பத்தின் லிஸ்ட் தான் பெரியது. பிரம்மாண்டமானதும் கூட.

 பவன் கல்யாண்

பவன் கல்யாண்

சிரஞ்சீவியை தவிர்த்துப் பார்த்தால், அவரது தம்பி பவன் கல்யாண், இன்றைய மார்க்கெட் நிலவரப்படி சிரஞ்சீவியை விட ஒருபடி மேலிருக்கிறார். பிறகு சிரஞ்சீவி மகன் ராம் சரண் தேஜா, அல்லு அர்ஜுன் என்று 'கிரேட் 1' ஹீரோக்களாக இவர்கள் வலம் வருகின்றனர். பிறகு வருண் தேஜ், அல்லு அரவிந்த், நாகேந்திர பாபு என்று லிஸ்ட் நீண்டுக் கொண்டே செல்லும். அதை முழுவதும் எழுத வேண்டுமெனில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியே முடிந்துவிடும்.

 செம வைரல்

செம வைரல்

ஸோ, நேரா விஷயத்திற்கு வருவோம். இதே குடும்பத்தைச் சேர்ந்த.. அதாவது சிரஞ்சீவியின் சகோதரி விஜய துர்கா மகன் சாய் தரம் தேஜா கடந்த 2014 முதல் தெலுங்கு சினிமாவில் இருக்கிறார். அடுத்தடுத்து ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார். இவர் மிகத் தீவிர கிரிக்கெட் ரசிகராம். அதாவது டெஸ்ட் மேட்சுகளை கூட பால் பை பால் பார்ப்பவர் என்கின்றனர்.

 நம்பர்.15

நம்பர்.15

இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது. தனது ட்விட்டரில்,

 கிரிக்கெட்டுடன்,

கிரிக்கெட்டுடன்,

சாம்பியன்களுடன்.

- சினிமாவிலிருந்து

என்று கேப்ஷனிட்டு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் ஜெர்ஸி அணிந்து, இந்திய அணிக்கு தனது வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார். அவரது ஜெர்ஸியில் சாய் தேஜ் என்று அவரது பெயரும், 15 என்ற எண்ணும் பொறிக்கப்பட்டிருக்க, மாஸாக தனது ஃபோட்டோவை வெளியிட்டிருக்கிறார்.

Story first published: Thursday, June 17, 2021, 20:31 [IST]
Other articles published on Jun 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+