சிசிஎல்: சென்னை ரைனோஸுக்கு 2வது தோல்வி.. தெலுங்கு வாரியர்ஸிடம் இன்று வீழ்ந்தது!
பெங்களூர்: சிசிஎல் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியில் ஆர்யா தலைமையிலான சென்னை ரைனோஸ் அணி, அகில் அக்கினி தலைமையிலான தெலுங்கு வாரியர்ஸ் அணியிடம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
சிசிஎல் என்று அழைக்கப்படும் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டி இந்த வருடம் 6 வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இன்று ஆர்யாவின் சென்னை ரைனோஸ் அணி, தெலுங்கு வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது.
இதில் டாஸ் வென்ற சென்னை ரைனோஸ் அணி கேப்டன் ஆர்யா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அதன்படி முதலில் களமிறங்கி விளையாடிய சென்னை அணி அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 164 ரன்களை குவித்தது.

சென்னை ரைனோஸ்
ஆர்யாவின் சென்னை ரைனோஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் சென்னை ரைனோஸ் அணி 3 விக்கெட் இழந்து 164 ரன்களை குவித்தது.அணியில் அதிகபட்சமாக விக்ராந்த் 64 பந்துகளில் செஞ்சுரி அடித்து சாதனை புரிந்தார்.

தெலுங்கு வாரியர்ஸ்
பின்னர் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தெலுங்கு வாரியர்ஸ் அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 168 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அகில் அக்கினி தலைமையிலான தெலுங்கு வாரியர்ஸ் அணி வெற்றியை சுவைத்தது.

2 வது தோல்வி
முன்னதாக சுதீப் தலைமையிலான கர்நாடகா புல்டோசர்ஸ் அணியிடம் 83 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை ரைனோஸ் தோல்வி அடைந்திருந்தது. இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி மீண்டும் தோல்வி கண்டதால் வரிசையாக 2 வது தோல்வியை சென்னை அணி பெற்றிருக்கிறது.

விக்ராந்த்
இன்றைய போட்டியில் நடிகர் விக்ராந்த் அதிரடியாக சதமடித்தும் கூட சென்னையால் வெற்றி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விக்ராந்த் 64 பந்துகளில் 100 ரன்கள் அடித்து சாதனை புரிந்தார்.

பேட்டிங், பீல்டிங்
முதல் ஆட்டத்தில் டாஸ் வென்று பீல்டிங்கை ஆர்யா தேர்வு செய்தார். ஆனால் கர்நாடகா புல்டோசர்ஸ் அந்தப் போட்டியில் வெற்றியைப் பறித்தது. இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆர்யா பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தார். ஆனால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அகில் அக்கினி தலைமையிலான தெலுங்கு வாரியர்ஸ் அணி வெற்றியை சுவைத்தது.இதன் மூலம் பேட்டிங், பீல்டிங் இரண்டுமே சென்னைக்கு கசப்பான அனுபவத்தையே அளித்திருக்கிறது.இந்தத் தோல்விகளில் இருந்து சென்னை அணி மீண்டு வருமா? பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications