Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விம்பிள்டன் "மும்மூர்த்தி"களுக்கு சச்சின் பாராட்டு

லண்டன்: விம்பிள்டனில் இந்த ஆண்டு கலக்கிய இந்திய டென்னிஸ் ஸ்டார்களுக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

லியாண்டர் பயஸ், சானியா மிர்ஸா, இளம் வீரர் சுமித் நகல் ஆகியோருக்கே சச்சின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மகளிர் இரட்டையர் பட்டத்தை சானியாவும், கலப்பு இரட்டையர் பட்டத்தை லியாண்டரும் பெற்றனர். இளம் வீரர்களுக்கான இரட்டையர் பட்டத்தை சுமித் நகல் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிங்கிஸுடன் இணைந்து

ஹிங்கிஸுடன் இணைந்து

சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸுடன் இணைந்து லியாண்டர் பயஸ் கலப்பு இரட்டையர் பட்டத்தை வென்றார். இது அவருக்கு 16வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகவும் அமைந்தது சிறப்பு.

சானியாவும் ஹிங்கிஸும்

சானியாவும் ஹிங்கிஸும்

அதேபோல சானியா மிர்ஸாவும், ஹிங்கிஸும் இணைந்து மகளிர் இரட்டையர் பட்டத்தை தட்டிச் சென்றனர். இது சானியாவுக்கு முதல் மகளிர் இரட்டையர் விம்பிள்டன் பட்டமாகும்.

சுமித் நகல்

சுமித் நகல்

இளம் வீரரான சுமித் நகர், இளைஞர்களுக்கான ஆடவர் இரட்டையர் பட்டத்தை வென்று சாதனை படைத்தார். நாம் ஹோங் லீ என்ற வீரருடன் இணைந்து சுமித் நகல் பட்டம் வென்றார்.

ஒரே ஆண்டில் 3 விம்பிள்டன்

ஒரே ஆண்டில் 3 விம்பிள்டன்

இந்திய வீரர், வீராங்கனைகள் ஒரே ஆண்டில் 3 விம்பிள்டன் பட்டங்களை வென்றது இதுவே முதல் முறையாகும் என்பதால் இது புதிய வரலாறாக அமைந்தது.

சச்சின் பாராட்டு

சச்சின் பாராட்டு

இதையடுத்து இந்த மூன்று பேருக்கும் சச்சின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் சச்சின் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

வாழ்த்துகள் லியாண்டர்

அந்த செய்தியில் " வாழ்த்துகள் லியாண்டர், ஹிங்கிஸ். மீண்டும் ஒரு கிராண்ட்ஸ்லாம் வென்றதற்குப் பாராட்டுகள். இளைஞர்களுக்கு அருமையான ரோல் மாடல்களாக உல்ளீர்கள் என்று கூறியுள்ளார்.

சானியாவுக்கும் வாழ்த்து

அதேபோல சானியாவுக்கு விடுத்த வாழ்த்தில், வாழ்த்துகள் சானியா, ஹிங்கிஸ். இருவரும் சிம்ப்ளி பென்டாஸ்ட்டிக். மேலும் பல கோப்பைகள் கிடைக்கட்டும். எங்களைப் பெருமைப்படுத்தி விட்டீர்கள் என்று கூறியுள்ளார் சச்சின்.

சுமித் நகல்

இளம் வீரர் சுமித் நகலுக்கு விடுத்துள்ள வாழ்த்தில், விம்பிள்டன் ஜூனியர் இரட்டையர் பட்டம் வென்ற சுமித் நகலுக்கு வாழ்த்துகள். இதுதான் ஆரம்பம். கடும் உழைப்பு உங்களது கனவுகளை நனவாக்கட்டும் என்று வாழ்த்தியுள்ளார் சச்சின்.

Story first published: Tuesday, July 14, 2015, 6:40 [IST]
Other articles published on Jul 14, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+