இந்தியா ஜெயிச்சுருச்சு.. ஆனா சச்சின் சதமடிக்க முடியாம போச்சே...கொல்கத்தா ரசிகர்கள் ஏமாற்றம்!
கொல்கத்தா: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்தியா 2வது இன்னிங்ஸ் விளையாடாமல் போனதால் சச்சின் டெண்டுல்கரின் சதத்தை காணும் வாய்ப்பை இழந்துவிட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி சச்சின் டெண்டுல்கருக்கு 199வது டெஸ்ட் போட்டி. அவர் 200வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற உள்ளார்.
இதனால் கொல்கத்தா போட்டி ஈடன் மைதானத்தில் சச்சின் விளையாடும் கடைசி போட்டியாக அமைந்தது. இதில் சச்சின் எப்படியும் சதமடித்துவிடமாட்டாரா என்ற ஏக்கம் ரசிகர்களிடம் இருந்தது.

2011-ல்தான் சதம்
சச்சின் கடைசியாக டெஸ்ட் போட்டியில் 2011-ல் தான் சதமடித்தார். அதன் பின்னர் சதத்தை ஓரிரு ரன்களில் கோட்டை விட்டு வந்தார். இதனால் இம்முறை சச்சின் சதமடித்துவிடமாட்டாரா என்ற பெரும் எதிர்பார்ப்புடன் கொல்கத்தா போட்டியை ரசிகர்கள் பார்த்தனர்.

10 ரன்களில் அவுட்
முதல் இன்னிங்ஸில் சச்சின் 10 ரன்கள்தான் எடுத்திருந்தார். ஆனால் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனதாக அம்பயர் கையைத் தூக்க ரசிகர்களின் இதயமே நின்று போனது. இந்த அவுட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

2வது இன்னிங்ஸுக்கு காத்திருப்பு
சரி 2வது இன்னிங்ஸில் சச்சின் சதமடித்துவிட மாட்டாரா? என்ற ஏக்கத்துடன் காத்திருந்தனர் ரசிகர்கள். ஆனால் ஷமி முகமது எனும் இந்திய இளம்புயல் மேற்கிந்திய தீவுகளை புரட்டிப் போட்டது.

அபார வெற்றியால் "அப்செட்"
இந்தியாவும் 2வது இன்னிங்ஸை விளையாடாமலேயே இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் 2வது இன்னிங்ஸில் சச்சின் சதமடித்துவிடுவார் என்ற நம்பிக்கையோடு காத்திருந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.


Click it and Unblock the Notifications