Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின் - அஞ்சலி, கோஹ்லி -அனுஷ்கா விம்பிள்டன் டென்னிஸை ரசித்த ஜோடிகள்

லண்டன்: தனது தோழி அனுஷ்காவுடன் விடுமுறையை உற்சாமாக கழித்து வரும் விராட் கோஹ்லி, லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் அரையிறுதிப் போட்டியை பார்த்து ரசித்துள்ளார். இந்த போட்டியை சச்சின் டெண்டுல்கர் தனது மனைவி அஞ்சலியையுடன் இணைந்து ரசித்தார் என்பதுதான் சுவாரஸ்யம்.

ஒவ்வொரு ஆண்டும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியைப் பார்வையிட சச்சின் டெண்டுல்கர் செல்வது வழக்கம், ரோஜர் பெடரரின் தீவிர ரசிகரான சச்சின், விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளை மிஸ் பண்ணவே மாட்டார்.

Tendulkar, Kohli and Anushka watch Wimbledon semi-finals

இம்முறையும் சச்சின் விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியைப் பார்க்க தனது மனைவி அஞ்சலியுடன் வருகை தந்தார். இம்முறை இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோஹ்லி தனது தோழி அனுஷ்கா சர்மா உடன் இதே அரையிறுதிப் போட்டியைப் பார்வையிட வந்தார். நான்கு பேரும் அருகருகே அமர்ந்து போட்டியைப் பார்த்து ரசித்தனர்.

விம்பிள்டனின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் சச்சின் டெண்டுல்கர் அவரது மனைவி அஞ்சலி மற்றும் விராட் கோலி, அனுஷ்கா சர்மா ஆகியோர் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

நோவக் ஜோகோவிச், ரிச்சர்ட் காஸ்கே ஆகியோர் மோதும் முதல் அரையிறுதியான இந்தப் போட்டியை பார்வையிட ஓய்வு பெற்ற பிரெஞ்ச் கால்பந்து வீரர் தியரி ஹென்றியும் வந்திருந்தார்.

கோஹ்லி - அனுஷ்கா ஆகிய இருவரும் இப்போது விடுமுறையைக் கழித்து வருகிறார்கள். சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா சென்று விடுமுறையைக் கொண்டாடினார்கள். இப்போது விம்பிள்டன் போட்டியைக் காண லண்டன் வந்திருக்கிறார்கள்.

Story first published: Saturday, July 11, 2015, 16:11 [IST]
Other articles published on Jul 11, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+