Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சென்னையில் நான் நல்ல டென்னிஸ் வீரர் கிடையாது என சொன்னாங்க! இப்போ 44 வயதிலும் விளையாடுகிறேன்- போபண்ணா

சென்னை : ஜூனியர் அளவில் தாம் டென்னிஸ் விளையாடும் போது சென்னையில் ரிஜெக்ட் செய்யப்பட்டதாகவும் ஆனால் தற்போது 44 வயதிலும் டென்னிஸ் விளையாடி வருவதாக இந்திய அணியின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மைக்கேல் இணையதளத்திற்கு அவர் அளித்த பிரத்தியேக பேட்டியில் தமது கடந்த காலம் மற்றும் எதிர்காலம் திட்டம் குறித்து தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், நான் ஜூனியர் அளவில் டென்னிஸ் வீரனாக இருந்தபோது இந்தியாவில் உள்ள பல டென்னிஸ் அகாடமி நான் சரியாக விளையாடவில்லை எனக் கூறி ரிஜெக்ட் செய்து விட்டார்கள். சென்னையில் உள்ள பிரிட்டானியா அமிர்தராஜ் டிரஸ்ட் அகாடமியும், புனேவில் உள்ள பத்ரா அகாடமியும் என்னை ரிஜெக்ட் செய்தார்கள். ஆனால் தற்போது எனக்கு வயது 44 ஆகிவிட்டது. நான் இன்னும் டென்னிஸ் விளையாடுகிறேன்.

tennis rohan bopanna

இப்போது எல்லாம் உள்ள சிறுவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என பெற்றோர்கள் வற்புறுத்துவதாக தினமும் கேள்விப்படுகிறேன். ஆனால் என்னுடைய விஷயத்தில் நான் அதிர்ஷ்டசாலியாக நினைக்கிறேன். எனக்கு படிப்பு சரியாக வரவில்லை என்றாலும் என்னுடைய பெற்றோர்கள் எனக்கு தொடர்ந்து ஆதரவளித்தார்கள். டென்னிசில் நான் சிறந்து விளங்கியதற்கு என்னுடைய பெற்றோர்களின் ஆதரவு தான் முக்கியம்.

இன்றுவரை அவர்களுடைய ஆதரவு எனக்கு தொடர்கிறது. 2012 ஆம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. என்னுடைய மனைவிக்கும் டென்னிஸ் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் அவரும், என்னுடைய குழந்தைகளும் எனக்கு தொடர்ந்து உறுதுணையாக இருக்கிறார்கள். நான் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் இல்லை என்றாலும் அவர்கள் அதனை புரிந்து கொண்டு எனக்கு ஒத்துழைத்தார்கள்.

சர்வ் செய்து என்பது, என் ஆட்டத்தின் மிகவும் முக்கியமான பலமாகும். இதற்காக ஒரு நாளில் தொடர்ந்து 200 முறை சர்வ் செய்து பயிற்சி செய்வேன். நான் முதல் முதலாக 2002 ஆம் ஆண்டு டேவிஸ் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டேன். இது என்னுடைய கனவாக இருந்தது. இதற்காக என்னுடைய பெற்றோர்கள் பார்ட்டி எல்லாம் வைத்தார்கள். ஒற்றையர் பிரிவில் என்னால் நினைத்தது போல் சாதிக்க முடியவில்லை.

இதனால்தான் இரட்டையர் பிரிவுக்கு நான் மாறினேன் குறிப்பாக பாகிஸ்தான் வீரர் ஆயிஷாம் குரேஷியுடன் நான் ஜோடி சேர்ந்து விளையாடினேன். 2010ஆம் ஆண்டு விம்பிள்டன் காலிறுதி, அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டி வரை நாங்கள் சென்றோம். எங்களை தோற்கடிப்பதை மிகவும் கடினம் என்ற பெயரை பெற்றோம். அதுவும் இந்திய வீரரும் பாகிஸ்தான் வீரரும் இணைந்தது கூடுதல் வசீகரத்தை எங்களுக்கு தந்தது..

தற்போது எனக்கு 44 வயதாகி விட்டது. டென்னிஸ் போட்டியில் இன்னும் விளையாடுகிறேன். இதற்கு உடல் தகுதி, ஒரு விஷயத்தை தொடர்ந்து செய்தல் போன்றவை மிகவும் முக்கியமாகும். இதற்கு வேறு எந்த ஒரு குறுக்கு வழியும் கிடையாது. எனக்கு நல்ல பயிற்சியாளர்கள் இருந்தார்கள். கூடுதலாக நான் யோகாவும் கற்றுக் கொண்டேன். என்னுடைய பிசியோ நிபுணர்கள் இல்லை என்றால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது.

டென்னிஸில் சாதிக்க வேண்டும் என்பதற்காக தினமும் நான் பயிற்சி செய்து வந்தேன். டென்னிசன் சாதிக்க வேண்டும் என்றால் குடும்பத்தின் ஒத்துழைப்பு நிச்சயம் தேவை. தற்போது இரட்டையர் பிரிவில் கொலம்பிய வீரர் நிக்கோலோசுடன் இணைந்து விளையாட ஆயத்தமாகி வருகிறேன். அவருடன் ஆஸ்திரேலியா ஓபன் தொடரில் பங்கேற்க போகிறேன். மற்ற இளம் வீரர்களுக்கும் உதவ வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் பயிற்சி முகாம் நடத்துகிறேன் என்று ரோகன் போபண்ணா கூறியுள்ளார்.

Story first published: Sunday, December 1, 2024, 21:44 [IST]
Other articles published on Dec 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+