நான்காவது டெஸ்ட் ..நான்காம் நாள்..தொடரை வென்ற இங்கிலாந்து..டாப் 5 நிகழ்வுகள்
சௌதாம்ப்டன் : இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் நான்காம் நாளான நேற்று இங்கிலாந்து அணி இந்திய அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வென்றது. இந்திய அணியின் முன்வரிசை தொடக்க வீரர்களும், பின்வரிசையில் ஆடிய ரிஷப் பண்ட், அஸ்வின், பண்டியா, இஷாந்த், பும்ரா என யாரும் ரன் குவிக்கவோ, மற்ற வீரருடன் கூட்டணி அமைக்கவோ ஒத்துழைக்கவில்லை.

நேற்றைய தினம் நிகழ்ந்த டாப் 5 நிகழ்வுகள்:
1 விரைவாக முடிவுக்கு வந்த இங்கிலாந்து இன்னிங்ஸ்
நான்காம் நாள் ஆட்டம் தொடங்கிய முதல் பந்திலேயே பிராட் விக்கெட்டை வீழ்த்தினார் ஷமி. அதன் பின்னர் அடுத்த சில நிமிடங்களில் சாம் கர்ரன் ரன் அவுட் ஆக இங்கிலாந்து இன்னிங்ஸ் 271 ரன்களில் முடிவுக்கு வந்தது.
2 தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பல்
245 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. இலக்கை துரத்தும் முன்பே ஆட்டமிழந்தார் ராகுல். அவர் ரன் ஏதும் எடுக்காமல் பிராட் பந்தில் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து தவான் 17 ரன்களிலும்,புஜாரா 5 ரன்களிலும் வெளியேறினர்.
3 நம்பிக்கை அளித்த கோஹ்லி-ரஹானே
இந்திய அணி 22 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தத்தளித்தபோது கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் ரஹானே இருவரும் இணைந்து நான்காவது விக்கெட்டிற்கு 101 ரன்களை சேர்த்தனர். இவர்கள் விளையாடிய விதம் இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தருவதாக அமைந்தது. விராட் கோஹ்லி 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.
4 மொயீன் அலி சுழல் மிரட்டல்
முதல் இன்னிங்சில் 5 விக்கெட்களை வீழ்த்திய மொயீன் அலி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணியை நிலைகுலைய செய்தார். அவர் கோஹ்லியின் விக்கெட்டை வீழ்த்தியது ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
5 பொறுப்பற்ற லோயர் மிடில் ஆர்டர்
விராட் கோஹ்லி ஆட்டமிழந்த பிறகு இந்திய வீரர்கள் ஒருவர் கூட பொறுப்பான முறையில் பேட்டிங் செய்யவில்லை. ஹார்டிக் பாண்டியா டக் அவுட் ஆகி வெளியேறினார். ரிஷப் பந்த் மற்றும் அஸ்வின் ஆகியோர் அதிரடியாக ஆடி தலா 18 மற்றும் 25 ரன்களை குவித்தனர்.
ஆனாலும் இது வெற்றி பெறுவதற்கான வழியை உண்டாக்கவில்லை. இங்கிலாந்து அணியின் சாம் கர்ரன் 8 ஆம் நிலையில் ரன்களை குவித்து இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். ஆனால் இந்திய அணியில் ரஹானேவுக்கு பிறகு ஒருவரும் நிலைத்து ஆடவில்லை.
Story first published: Monday, September 3, 2018, 11:24 [IST]
Other articles published on Sep 3, 2018


Click it and Unblock the Notifications