டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசை: ஆல் ரவுண்டரில் அஸ்வின் தொடர்ந்து முதலிடம்!
துபை: டெஸ்ட் கிரிக்கெட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.
டெஸ்ட் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதன்படி பேட்டிங் வரிசையில் தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் முதலிடத்தில் நீடிக்கிறார்.
இந்திய வீரர்கள் புஜாரா 6-வது இடத்தில் இருக்கிறார். கோஹ்லி 20-வது இடத்திலும் உள்ளார்.

பெளலிங்கில் ஸ்டெயின்
பந்து வீச்சாளர்கள் வரிசையில் தென்னாப்பிரிக்க வீரர் ஸ்டெயின் முதல் இடத்தில் தொடருகிறார்.

பந்துவீச்சில் அஸ்வின் 5வது இடம்
இந்திய பந்துவீச்சாளர்களில் அஸ்வின் 5-வது இடத்தில் இருக்கிறர.

ஓஜாவுக்கு 9வது இடம்
அதேபோல் இந்திய பந்தூவீச்சாளர் பிரக்யான் ஓஜா 9-வது இடத்தில் இருக்கிறார். ஜாகீர்கான் 20-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஆல்ரவுண்டரில் அஸ்வின் தொடர்ந்து முதலிடம்
ஆல்-ரவுண்டர்கள் வரிசையில் இந்திய வீரர் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
Story first published: Tuesday, November 26, 2013, 10:46 [IST]
Other articles published on Nov 26, 2013


Click it and Unblock the Notifications