For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி... கோஹ்லி கிடையாது... 8ம் தேதி இந்திய அணி அறிவிப்பு!

டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி முதல் டெஸ்டில் இந்தியாவுடன் விளையாட உள்ளது. இதற்கான அணி 8ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

Recommended Video

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோஹ்லி பங்கேற்கவில்லை

டெல்லி: ஆப்கானிஸ்தான் அணி அறிமுகமாகும் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி வரும 8ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு டெஸ்ட போட்டி அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அயர்லாந்து அணி தனது முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாட உள்ளது.

Test team for Afghanistan to be announced on 8th.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் இந்தியாவுடன் விளையாட உள்ளது. பெங்களூருவில் ஜூன் 14 முதல் 18 வரை இந்த டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணி வரும் 8ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

இதைத் தவிர இங்கிலாந்தின் டப்ளின் நகரில் ஜூன் 27ம் தேதி துவங்கும் சுற்றுப் பயணத்தில் அயர்லாந்து அணியுடன் இரண்டு ஒருதினப் போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது. அதற்கான அணியும் அறிவிக்கப்பட உள்ளது.

அதைத் தவிர, இங்கிலாந்துக்கு ஜூனில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய ஏ அணியும் வரும் 8ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

விராட் கோஹ்லி மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் ஜூன் மாதத்தில் இங்கிலாந்து கவுன்டி அணிக்காக விளையாட உள்ளனர். அதனால், அவர்கள் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் விளையாட மாட்டார்கள்.

அதே நேரத்தில் கவுன்டி அணிக்காக விளையாடும் சத்தேஸ்வர் புஜாரா ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலையில், இங்கிலாந்துக்கு இந்திய அணி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. அதனால், ஜூனில் இங்கிலாந்து செல்லும் இந்திய ஏ அணியில், இந்திய அணிக்காக விளையாடும் சில விரர்களும் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜங்யா ரஹானே, முரளி விஜய், ரோஹித் சர்மா, ஹார்திக் பாண்டயா உள்ளிட்டோர் இந்திய ஏ அணிக்காகவும் விளையாடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, May 4, 2018, 17:00 [IST]
Other articles published on May 4, 2018
English summary
Indian Test team for Afghanisthan test match to be announced.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+