பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி-ஐசிசி அறிவிப்பு
லண்டன்: அடுத்த இரண்டு ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் பகலிரவு ஆட்டமாக நடத்தப்படும் என்று ஐ.சி.சி அறிவித்துள்ளது.
டுவென்டி 20 போட்டிகள் ஹிட் ஆகி விட்டதால், உலகெங்கும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதால் டெஸ்ட் போட்டிகளை பகல்-இரவு ஆட்டமாக மாற்றலாமா என ஆலோசிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) தலைவர் டேவிட் மார்கன் இதுகுறித்து கூறுகையில், 'இன்னும் 2 ஆண்டுகளில் பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளை அறிமுகப்படுத்த உள்ளோம்.
இது சிலருக்கு ஆச்சரியமாகவும், ஏமாற்றமாகவும் இருக்கலாம். டெஸ்ட் கிரிக்கெட்டை பிரபலப்படுத்துவது மிகவும் அவசியமாகி விட்டது. பகல்-இரவு டெஸ்டுக்கு இங்கிலாந்து மிகவும் பொருத்தமாக இருக்கும்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 இடத்தை இந்தியா பிடித்துள்ளதை பாராட்டுகிறேன். மைதானத்தில் ரசிகர்களை கவர்ந்து இழுக்க இந்திய கிரிக்கெட் தயாராக வேணடும்' என்றார்.


Click it and Unblock the Notifications