எங்க 'தல' டா, டோணி டா: கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்
விசாகப்பட்டினம்: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கடைசி ஓவரில் 23 ரன்கள் எடுத்த புனே அணியின் கேப்டன் டோணியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
ஐபிஎல் போட்டிகளில் சிங்கமாக வலம் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 ஆண்டுகால தடையால் இந்த ஆண்டு விளையாட முடியவில்லை. இந்நிலையில் சென்னை அணியில் இருந்த வீரர்கள் தற்போது புனே, குஜராத், பஞ்சாப் என பல அணிகளில் சிதறிக் கிடக்கிறார்கள்.
புனே அணியின் கேப்டனாக சென்னை அணியின் கேப்டன் டோணி உள்ளார்.

புனே
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நாடு முழுவதும் ஆதரவாளர்கள் உள்ளனர். இந்நிலையில் சென்னை அணியின் கேப்டன் டோணிக்காக சிஎஸ்கே ஆதரவாளர்கள் புனே அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சொதப்பல்
புனே அணி இந்த ஐபிஎல் சீசனில் அடி மேல் அடி வாங்கிவிட்டது. டோணியின் பேட்டிங்கை கிரிக்கெட் விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்தனர். இருப்பினும் டோணியின் ஆதரவாளர்கள் மட்டும் அவருக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தனர்.

டோணி
பஞ்சாப் அணியுடன் புனே அணி மோதிய ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் டோணி 32 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். அதுவும் கடைசி ஓவரில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரி அடித்தார்.

ஹெலிகாப்டர்
நேற்றைய ஆட்டத்தில் டோணி 4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். கடைசி பந்தில் தனது ஹெலிகாப்டர் ஷாட் மூலம் சிக்ஸர் அடித்து ஸ்டைலாக ஆட்டத்தை முடித்தார்.

தல டா
இத்தனை நாட்கள் டோணி ஐபிஎல் போட்டியில் சரியாக விளையாடவில்லை என்று விமர்சித்தவர்கள் எல்லாம் வாயடைத்து போயுள்ளனர். கூல் கேப்டனின் ஆதரவாளர்களோ எங்க தல டா, டோணி டா என்று சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications