Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனி தமிழ்நாட்டில் ஒரே தல தான்..!! நடிகர் அஜித்தின் முடிவால் தோனி ரசிகர்கள் மகிழ்ச்சி

சென்னை; தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவரான அஜித்குமாரை ரசிகர்கள் தல என்று அன்புடன் அழைப்பார்கள்.

இதே போன்று சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு அணிக்காக விளையாடிய தோனியை , கிரிக்கெட் ரசிகர்கள் தல என்று அழைத்து வந்தனர்.

இதனால் நாடு முழுவதும் தோனிக்கு தல தோனி என்ற பெயர் பிரபலமாகிவிட்டது.

எதிர்ப்பு

எதிர்ப்பு

வடநாட்டு மக்களும் தோனியை தல தோனி என்று அழைக்க தொடங்கினர். இதனால் கடும் அதிருப்தி அடைந்த அஜித் ரசிகர்கள், தல என்றால் அது அஜித் தான். அஜித்தை மட்டும் தான் தல என்று குறிப்பிட வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் செய்வதை வழக்கமாக செய்து வந்தனர்

ஒரே தல அஜித்

ஒரே தல அஜித்

ஒரே தல அஜித், தல என்றால் அஜித் தான் போன்ற டிரெண்டிங் வசனங்களும் இடம்பெற்றுக்கும். இதற்கு தோனி ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்து தல என்றால் தோனி தான் என்று எதிர் கருத்து தெரிவிக்க, இரு தரப்புக்கும் எப்போதும் சமூக வலைத்தளங்களில் பஞ்சாய்த்து வந்து கொண்டே இருக்கும்

கோரிக்கை

கோரிக்கை

இதனிடையே நடிகர் அஜித்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இனி என்னை அழைக்கும் போதோ, என்ன பற்றி குறிப்பிடும் போதோ தல என்று அழைக்க வேண்டாம் என்று ஊடகங்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார். வெறும் அஜித் அல்லது அஜித்குமார், ஏ.கே. என்று அழைத்தால் மட்டும் போதும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Recommended Video

Dhoni, Kohli Take Salary Cuts for CSK and RCB | IPL 2022 Retention | OneIndia Tamil
மகிழ்ச்சி

மகிழ்ச்சி

நடிகர் அஜித்தின் அறிவிப்பு அவரது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்தாலும், தோனி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இனி தோனியை தல என்று அழைப்பதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் அஜித் ரசிகர்களும் இனி எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக தலைவர் என்பதை சுருக்கமாக தல என்று சென்னை மக்கள் அழைப்பார்கள். இந்த அடைமொழியால் ஏற்பட்ட மோதல், தற்போது ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.

Story first published: Wednesday, December 1, 2021, 16:18 [IST]
Other articles published on Dec 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+