For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தொடர்ந்து சிக்சர்களை தெறிக்கவிட்ட தோனி... உற்சாக கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

சென்னை : ஐபிஎல் 2020 சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் கேப்டனாக களமிறங்கி ஆடவுள்ள எம்எஸ் தோனி சென்னை சிதம்பரம் மைதானத்தில் தன்னுடைய பயிற்சி ஆட்டத்தை துவங்கியுள்ளார்.

Recommended Video

First practice session of the season. Thala is back

கடந்த 8 மாதங்களாக சர்வதேச போட்டிகளில் ஆடாமல் உள்ள எம்எஸ் தோனியின் ரசிகர்கள் அவரது ஆட்டத்தை காண்பதற்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தோனி ஐபிஎல் தொடரில் ஆடவுள்ளார்.

சிஎஸ்கேவின் அதிகாரப்பூர்வ பயிற்சி முகாம் வரும் 19ம் தேதி துவங்கவுள்ளது. ஆயினும் ரெய்னா உள்ளிட்ட வீரர்கள் ஏற்கனவே பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை வந்த தோனி, நேற்று முதல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத வீரர்

சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத வீரர்

கடந்த உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதையடுத்து அவர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவில்லை. அவரது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பல்வேறு யூகங்களை வெளிப்படுத்தி வந்தாலும், இதுகுறித்து தோனி வாய்திறக்காமல் உள்ளார். கடந்த உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதையடுத்து அவர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவில்லை. அவரது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பல்வேறு யூகங்களை வெளிப்படுத்தி வந்தாலும், இதுகுறித்து தோனி வாய்திறக்காமல் உள்ளார்.

எம்எஸ் தோனி ஆதங்கம்

எம்எஸ் தோனி ஆதங்கம்

இந்நிலையில் கடந்த உலக கோப்பை போட்டியின் அரையிறுதி ஆட்டம் குறித்து தற்போது எம்எஸ் தோனி வாய்திறந்துள்ளார். அந்த போட்டியின் 49வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த தோனி, அடுத்த பந்தில் 2 ரன்னுக்காக ஓடிய போது குப்தில்லின் த்ரோவில் ஆட்டமிழந்தார். இதனால் இந்தியாவின் உலக கோப்பை கனவு தகர்ந்தது. இதுகுறித்து தற்போது மனம்திறந்துள்ள தோனி, அந்த பந்தில் தான் டைவ் அடித்து அவுட் ஆகாமல் தவிர்த்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சிஎஸ்கே கேப்டனாக தொடரும் தோனி

சிஎஸ்கே கேப்டனாக தொடரும் தோனி

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே கேப்டனாக இந்த ஆண்டும் தொடர்ந்து ஆடவுள்ளார் தோனி. அவர் இந்திய அணியில் இடம்பெறாவிட்டாலும் சிஎஸ்கேவில் அடுத்த ஆண்டும் தொடர்வார் என்று அந்த அணியின் நிறுவனர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் இந்திய அணியில் அவரது ஆட்டத்தை பார்க்க முடியாத ரசிகர்கள், அவரை ஐபிஎல் போட்டிகளில் காண்பதற்காக காத்திருக்கிறார்கள்.

சென்னை வந்த 'தல'

சென்னை வந்த 'தல'

ஐபிஎல் 2020 தொடர் வரும் 29ம் தேதி துவங்கவுள்ள நிலையில், சிஎஸ்கேவின் பயிற்சி முகாம் வரும் 19ம் தேதி துவங்கும் என்றும், அதில் அணி வீரர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என்றும் சிஎஸ்கே தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னதாக பயிற்சியில் ஈடுபடும் வகையில் தோனி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை வந்தார். அவருக்கு ரசிகர்கள் செல்லும் வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ரசிகர்கள் உற்சாகம்

இந்நிலையில் நேற்று மற்றும் இன்று தொடர்ந்து பயிற்சி ஆட்டங்களில் சக வீரர்கள் பியூஷ் சாவ்லா, கர்ன் ஷர்மா, சாய் கிஷோர் போன்ற பந்துவீச்சாளர்களின் பந்துகளை எதிர்கொண்டு தோனி நெட் பயிற்சிகளில் ஈடுபட்டார். தோனியின் ஆட்டத்தை காண கடந்த ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் ரசிகர்கள் மைதானத்தில் குவிந்திருந்து உற்சாகப்படுத்தினர்.

ரசிகர்கள் ஆச்சரிய அதிர்ச்சி

இந்நிலையில் நீண்ட காலத்திற்கு பிறகு ஆடிய மகேந்திர சிங் தோனி, இந்த பயிற்சியின்போது சிக்ஸ்களை விளாசினார். இதன்மூலம் தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தில் குறைவதில்லை என்ற மொழிக்கு உதாரணமானார் தோனி. அவரது விளாசல்களுக்கு மைதானத்தில் இருந்த ரசிகர்களின் ஆரவாரம் தொடர்ந்தது. சர்வதேச போட்டிகளில் பங்கேற்காவிட்டாலும் தொடர்ந்து ராஞ்சி மைதானத்தில் தோனி பயிற்சி மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, March 3, 2020, 15:03 [IST]
Other articles published on Mar 3, 2020
English summary
Dhoni starts training at Chepauk ahead of IPL
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+