ஆசிய கோப்பை தொடரில் தொடர்ந்து விளையாடுவாரா தமீம் இக்பால் ?
துபாய் : ஆசிய கோப்பை தொடரில் முதலாவது போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் பங்களாதேஷ் அணி இலங்கை அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்தது. போட்டியின் இரண்டாவது ஓவரை சுரங்கா லக்மல் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட தமீம் இக்பால் புல் ஷாட் ஆட முயன்ற போது பந்து அவரது மணிக்கட்டை தாக்கியது.

தொடர்ந்து அவரால் பேட்டிங் செய்யமுடியவில்லை. அதனால் உடனடியாக களத்தில் இருந்து வெளியேறினார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரது மணிக்கட்டில் காயம் இருப்பதை உறுதி செய்தனர். ஸ்கேன் செய்து பார்த்த பின்னர் அவர் ஓய்வில் இருக்கவேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பங்களாதேஷ் 9 விக்கெட்களை இழந்தபோது,அவர் அணிக்காக மீண்டும் களமிறங்கி ஒரு கையால் பேட்டிங் செய்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவியது குறிப்பிடத்தக்கது. கடைசி விக்கெட்டிற்கு அவரது உதவியுடன் முஷ்பிகுர் ரஹீம் 32 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.
காயம் குறித்து பங்களாதேஷ் கேப்டன் மொர்தசா கூறுகையில்,இன்னும் இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் ஸ்கேன் செய்து பார்த்து காயத்தின் தன்மை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
தமீம் இக்பால் பங்களாதேஷ் அணியின் அதிக ரன்களை குவித்த வீரர் ஆவார். அவர் அணியில் இடம்பெறவில்லை எனில் அது பங்களாதேஷ் அணிக்கு பெரும் பின்னடைவாகும்.
ஆனால் அவர் ஆசிய கோப்பை போட்டி தொடரில் தொடர்ந்து விளையாடுவது சந்தேகமே..
Story first published: Sunday, September 16, 2018, 15:22 [IST]
Other articles published on Sep 16, 2018


Click it and Unblock the Notifications