வெற்றியை தீர்மானிக்கும் அந்த 3 காரணிகள்..!! இது நடந்தால் இந்தியா ஜெயிப்பதை யாராலும் தடுக்க முடியாது
லண்டன்:ஓவல் மைதானத்தில் 3 முக்கிய சம்பவங்களை சிறப்பாக செய்தால்... ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியாவுக்கு ஜெயம்தான்.
2019ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் மிக முக்கிய போட்டி, ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. 5 முறை உலகக் கோப்பை சாம்பியன், ஆஸ்திரேலியா, 2 முறை சாம்பியன் இந்தியாவும் மோதுகின்றன. 2 அணிகளுமே இந்த ஆண்டு உலகக் கோப்பை தொடரை சிறப்பாக தொடங்கி இருக்கின்றன.
இந்த மிகப்பெரிய போட்டியில் 3 முக்கிய காரணிகள் போட்டியின் முடிவை தீர்மானிக்க உள்ளன. அவற்றை பற்றி இப்போது பார்ப்போம். அண்மை காலமாக ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் மிகப்பெரிய வலிமையாக அதன் டாப் ஆர்டர் பேட்டிங்.

டாப் ஆர்டர் கவனம்
ரோகித், தவான், கோலி என ஒரு படையே இருக்கிறது. 3 பேருமே அதிக ரன் அடித்து, அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்பவர்கள். ஆனால், ரோகித் தவற, மற்றவர்ள் லேசான தடுமாற்றத்தை சந்தித்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறுகின்றனர். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்கிற்கு எதிராக இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிலைத்து நிற்க வேண்டும்.

கவனிக்க வேண்டிய பவுலிங்
சில மாதங்களாக காயத்தால் விலகியிருந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் சிறப்பாக பவுலிங் பண்ண, ஆஸ்திரேலிய பௌலிங் முழுவதும் சிறந்த மாற்றத்துடன் தென் படுகிறது. போட்டி தொடக்கத்தில் ரோகித் சர்மா இடது கை ஸ்விங் பவுலிங்கை சரியாக எதிர்கொள்ள மாட்டார். கோலியும் நிலைமையும் அப்படி தான். எனவே, அவர்கள் இந்த முறை... அதை சரிசெய்து கொள்வார்கள் என நம்பலாம்.

மீண்டு வந்தனர்
அடுத்து இரு அணிகளும் அட்டகாசமான, வலிமையான பந்துவீச்சை கொண்டவை. சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வருட தடைக்கு பிறகு மீண்டும் திரும்பி உள்ள வார்னர் ஆப்கானிஸ் தானிற்கு எதிரான போட்டியில் ஆரம்பத்தில் சற்று தடுமாற்றம் மற்றும் இடற்பாடுகள் சந்திப்பது விளையாடினார்.

அனல் பறக்கும் காம்பினேஷன்
இருப்பினும் சிறிது ஆட்டத்திற்கு பிறகு நன்றாக செட் செய்து மிடில் ஓவரில் ரன்களை குவித்து அரைசதம் விளாசினார். எனவே அதே ஆட்டத்தை தொடருவார் என்று எதிர்பார்க்கலாம். ஆனால்... தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான கடந்த போட்டியில் இடது கை பேட்ஸ்மேன் டிகாக்கிற்கு எதிராக அற்புதமாக பந்துவீசியவர். எனவே, வார்னர், பும்ரா காம்பினேஷனில் அனல் பறக்கும் என்று தெரிகிறது.

டெத் ஓவர் நிலவரம்
2019 ம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணியின் மிகப்பெரிய வலிமை... டெத் ஓவரில் ஹர்திக் பாண்டியா மற்றும் தோனியின் ஆட்டம் தான். சில ஆண்டுகளாக இந்திய அணி இந்த விஷயத்தில் கொஞ்சம் சொதப்பல் ரகமாக இருக்கிறது. அதற்கு தீர்வாக, தொடக்க வீரர்கள் நிலைத்து விளையாடினால் பின்வரிசையில் தோனி, பாண்டியா கை கொடுத்து ரன்களை உயர்த்த தொடங்கி விடுவர்.

பதம் பார்க்குமா யார்க்கர்?
பேட் கமின்ஸ் ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளர். அதிவேக யார்க்கர் மற்றும் பேட்ஸ் மேன்களுக்கு ஷார்ட் பிட்ச் பந்துவீச்சை மேற்கொள்பவர். பின்வரிசையில் அதிரடி பேட்ஸ் மேன்களை இந்திய அணி கொண்டுள்ளதால், டெத் ஓவரில் கமின்ஸ் பந்துவீசுவாரா என்று தெரியவில்லை. ஆக ஒட்டுமொத்தமாக பார்த்தோமானால், இந்த 3 முக்கிய காரணிகள் தான் யாருக்கு வெற்றி என்பதை முடிவு செய்யும் என்று கூறலாம்.


Click it and Unblock the Notifications