For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மழைக்கு ஒதுங்கியிருக்காங்க... வேற ஒண்ணும் இல்ல... விசாரணைக்கு தயார்.. பிசிசிஐ அதிரடி

மெல்போர்ன் : இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, ரிஷப் பந்த் உள்ளிட்ட 5 இந்திய வீரர்கள் உணவகம் ஒன்றிற்கு சென்று ரசிகர் ஒருவருடன் செல்பி எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து அவர்களை தனிமைப்படுத்தியுள்ள பிசிசிஐ இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் அவர்கள் மழை காரணமாகவே உணவகத்தின் உள்ளே சென்றதாகவும் இது பயோ பபள் விதிமுறை மீறல் கிடையாது என்றும் பிசிசிஐ மேலும் கூறியுள்ளது.

7ம் தேதி 3வது டெஸ்ட்

7ம் தேதி 3வது டெஸ்ட்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் டெஸ்ட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. வரும் 7ம் தேதி 3வது டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது. இதையொட்டி இரு அணிகளும் மெல்போர்னில் பயோ பபள் விதிமுறைகளுக்கு உட்பட்டு தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

விதிமுறை மீறல் என குற்றச்சாட்டு

விதிமுறை மீறல் என குற்றச்சாட்டு

இதனிடையே, ரோகித் சர்மா, ரிஷப் பந்த், சுப்மன் கில், நவ்தீப் சைனி மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறி மைதானத்திற்கு அருகில் உள்ள உணவகத்திற்கு சென்றதாகவும் அங்கு ரசிகர் ஒருவருடன் செல்பி எடுத்ததாகவும் அவரை பந்த் கட்டியணைத்ததாகவும் வெளியான தகவலையடுத்து அவர்கள் ஐவரையும் பிசிசிஐ தனிமைப்படுத்தியுள்ளது.

விசாரணைக்கு தயார் என அறிவிப்பு

விசாரணைக்கு தயார் என அறிவிப்பு

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிசிசிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது. இதையடுத்து இந்திய வீரர்கள் விதிமுறை மீறலில் ஈடுபடவில்லை என்றும் எந்த நேரத்திலும் கொரோனா பரிசோதனைக்கும் இதுகுறித்த விசாரணைக்கும் தயாராக உள்ளதாகவுசம் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மழைக்காக ஒதுங்கியுள்ளனர்

மழைக்காக ஒதுங்கியுள்ளனர்

மேலும் உணவகத்தின் வெளியில்இருந்த ஐந்து வீரர்களும் மழை பெய்ததன் காரணமாகவே உள்ளே சென்றுள்ளதாகவும் பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது. ஆயினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரோகித் சர்மா உள்ளிட்டவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தனியாக பயிற்சி மேற்கொள்ளவுள்ளதாகவும் தனியாகவே பயணம் மேற்கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

Story first published: Sunday, January 3, 2021, 12:23 [IST]
Other articles published on Jan 3, 2021
English summary
These 5 players will be traveling and training separately ahead of the third Test -BCCI
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+