For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் கொரோனா அச்சுறுத்தல்- தனிமைப்படுத்தப்பட்ட பயிற்சியாளர்

சிட்னி: இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு நடப்பாண்டில் எதுவுமே சரியில்லை. டி20 உலகக் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அரையிறுதியிலே தோல்வியை தழுவியது. சரி, அஷஸ் தொடரை ஆஸ்திரேலிய மண்ணில் வென்று சாதிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது

ஆனால், அந்த கனவிலும் மண் விழுந்தது. தொடர்ந்து 3 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணி தொடரை வென்றது.

7 பேருக்கு கொரோனா

7 பேருக்கு கொரோனா

தற்போது 4வது டெஸ்ட் போட்டி சிட்னியில் வரும் ஜனவரி 5ஆம் தேதி தொடங்குகிறது. ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் அணியை கொரோனா அச்சுறுத்தி வருகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் வீரர்களை தவிர 7 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.

தனிமையில் பயிற்சியாளர்

தனிமையில் பயிற்சியாளர்

இந்த நிலையில், கொரோனா பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் இங்கிலாந்து அணியுடன் சிட்னி டெஸ்ட் போட்டியில் கிறிஸ் சில்வர்வுட் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வீரர்களுக்கு நெருக்கடி

வீரர்களுக்கு நெருக்கடி

பயிற்சியாளர் பொறுப்பை கிராகம் தோர்பே தற்காலிகமாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தோல்வியால் துவண்டு போய் உள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களுக்கு தற்போது கொரோனா மேலும் நெருக்கடியை தந்துள்ளது.

Recommended Video

Ashwin in contention for ICC Men's Test Player Award 2021 | OneIndia Tamil
5-0 ஆபத்து

5-0 ஆபத்து

ஆஷஸ் டெஸ்ட் தொடரை 5க்கு0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முழுமையாக தோற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பெரும் அவமானத்தை தடுக்கும் முனைப்பில் இங்கிலாந்து அணி வீரர்கள் உள்ளனர். மேலும் பல இங்கிலாந்து அணி வீரர்கள் தங்களது டெஸ்ட் இடத்தை இழக்கும் அபாயம் எற்பட்டுள்ளது.

Story first published: Thursday, December 30, 2021, 20:21 [IST]
Other articles published on Dec 30, 2021
English summary
The Ashes 2021 England coach Chris silverwood isolation news. இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் கொரோனா அச்சுறுத்தல்- தனிமைப்படுத்தப்பட்ட பயிற்சியாளர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+