Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஷஸ் 5வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா செய்தது மிகப்பெரிய ஆபத்து.. ஒரு தலைமுறையையே பாதிக்கும்- காட்டிச்

சிட்னி: ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் SCG ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்யவில்லை. 1888ஆம் ஆண்டுக்குப் பிறகு சிட்னி மைதானத்தில் ஸ்பின்னர் இல்லாமல் ஆஸ்திரேலியா களமிறங்குவது இதுவே முதல் முறையாகும். இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் சுழற்பந்து வீச்சின் எதிர்காலம் குறித்து முன்னாள் வீரர் சைமன் கட்டிச் கவலை தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியில் டாட் மர்ஃபியும், இங்கிலாந்து அணியில் ஷோயப் பஷீரும் என முழுநேர சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தபோதிலும், இரு அணிகளுமே அவர்களைத் தங்கள் ஆடும் லெவனில் சேர்க்கவில்லை. குறிப்பாக, ஆஸ்திரேலியா SCG மைதானத்தில் சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல் களமிறங்குவது 1888ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல் முறையாகும். கடந்த ஆறு டெஸ்ட் போட்டிகளில் இது நான்காவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

The Ashes

இந்த நிலைமை எதிர்கால சுழற்பந்து வீச்சாளர்களின் வளர்ச்சிக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என கட்டிச் கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "சிட்னி டெஸ்ட்டில் இரு அணிகளுமே முதன்மை சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் களமிறங்குவது நம்ப முடியாத ஒன்று. என் காலத்தில் இது கேள்விப்படாத விஷயமாக இருந்திருக்கும். ஆனால், பிட்ச் தன்மை காரணமாக தேர்வுக்குழுவினரையோ அல்லது ஸ்டீவ் ஸ்மித்தையோ குறை கூற முடியாது."

"தற்போதைய பிட்ச் நிலைமைகளைக் கருத்தில் கொண்டால், அடுத்த ஓரிரு நாட்களில் இது கணிசமாக மோசமடையாத வரை, இந்த டெஸ்ட் போட்டி மூன்று நாட்களுக்குள் முடிந்துவிட வாய்ப்புள்ளது. எனவே, நாடு முழுவதும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்ற ஆடுகளங்கள் இல்லாத நிலையில், அடுத்த தலைமுறை சுழற்பந்து வீச்சாளர்களை ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட்டிற்காக எப்படி உருவாக்குவது என்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது. இது ஒரு ஆபத்தான போக்கு," என சுட்டிக் காட்டினார்.

SCG மைதானத்தில் போட்டி திங்கட்கிழமை தொடரவிருக்கும் சூழலில், இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தை 3 விக்கெட் இழப்புக்கு 211 ரன்களுடன் நிறைவு செய்தது. ஜோ ரூட் (72*) மற்றும் ஹாரி ப்ரூக் (78*) இருவரும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு அசைக்க முடியாத 154 ரன்கள் குவித்து, சரிவிலிருந்து அணியை மீட்டெடுத்தனர்.

Story first published: Sunday, January 4, 2026, 16:12 [IST]
Other articles published on Jan 4, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+