Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

The Ashes 2025: இங்கிலாந்து அணி அறிவிப்பு.. காயமடைந்த கேப்டன் ஸ்டோக்ஸ் அணிக்கு திரும்பினார்

லண்டன்: 2025-26 ஆஷஸ் தொடருக்கான 16 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இந்த அணி, நவம்பர் 21 முதல் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டிக்கு முன் ஏற்பட்ட தோள்பட்டை காயத்திலிருந்து ஸ்டோக்ஸ் மீண்டு வருவதால், அவர் ஆசஸ் தொடருக்கு தயாராக இருப்பார்.

இதே போன்று நீண்ட காயத்திற்கு பிறகு வேகப்பந்து வீச்சாளர் மார்க் வூட் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளார். அவர் 2025 பிப்ரவரியில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு பிறகு எந்தவொரு போட்டி கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை.

The Ashes 2025-26 England team

இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் கஸ் ஆட்கின்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். வலது கை வேகப்பந்து வீச்சாளர்களான ஜோஷ் டங், பிரைடன் கார்ஸ், மற்றும் மேத்யூ பாட்ஸ் ஆகியோரும் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளனர்.

அனுபவ வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ், இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக உடற்தகுதி காரணமாக ஆசஸ் தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை.ஷோயிப் பஷீர் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக இடம்பெறுகிறார். மேலும் சுழற்பந்து ஆல்-ரவுண்டர் வில் ஜாக்ஸ் மீண்டும் டெஸ்ட் அணியில் அழைக்கப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரான ஜாக்ஸ் இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.லார்ட்ஸில் நடந்த இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது பஷீர் விரல் காயத்தால் பாதிக்கப்பட்டார். ஜாக்ஸும் காயத்தில் உள்ள நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரை தவறவிடுவார். ஆஷஸ் தொடருக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.

நட்சத்திர பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக், ஆலி போப்பிற்கு பதிலாக முதல் முறையாக துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பேட்டிங் அணியில் வழக்கமான வீரர்களான தொடக்க ஆட்டக்காரர்கள் ஜாக் க்ரவ்லி மற்றும் பென் டக்கட், ஜோ ரூட், ஜேக்கப் பெதல், மற்றும் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் தலைமையில் 2011-12 பயணத்தில் 3-1 என்ற கணக்கில் புகழ்பெற்ற ஆசஸ் தொடரை கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் வென்றது. 2013-14 பயணத்தில் 5-0 என தோல்வியையும், 2017-18 மற்றும் 2021-22 தொடர்களில் தொடர்ச்சியாக 0-4 தோல்விகளையும் சந்தித்தது.சமீபத்திய ஆஷஸ் தொடர் 2023 இங்கிலாந்தில் நடைபெற்றது. அந்த தொடர், 2-2 என சமனில் முடிந்தது.

2025-26 ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் ஆட்கின்சன், ஷோயிப் பஷீர், ஜேக்கப் பெதல், ஹாரி ப்ரூக் (துணை கேப்டன்), பிரைடன் கார்ஸ், ஜாக் க்ரவ்லி, பென் டக்எட், வில் ஜாக்ஸ், ஆலி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), ஜோஷ் டங், மார்க் வூட்.

Story first published: Tuesday, September 23, 2025, 23:36 [IST]
Other articles published on Sep 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+