Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

AUS vs ENG: "நீங்க 152 ஆல் அவுட். நாங்க 110 ஆல் அவுட்".. ஆஷஸ் டெஸ்ட்டில் நடந்த 'பேட்டிங்' கூத்து

மெல்போர்ன்: 2025 ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி நடந்த மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் போட்டி போட்டுக்கொண்டு பேட்டிங்கில் சொதப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகப் பிரம்மாண்டமான போட்டியாகக் கருதப்படுவது மெல்போர்னில் (MCG) நடக்கும் 'பாக்சிங் டே' டெஸ்ட்.

இந்த முறை சுமார் 94,199 ரசிகர்கள் மைதானத்தில் திரண்டிருக்க, ஆட்டம் அனல் பறக்கும் என்று எதிர்பார்த்தால், நடந்ததோ வேறு. இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே 20 விக்கெட்டுகள் மளமளவென சரிந்து, ஒரு நாள் ஆட்டம் முடிவதற்குள் இரண்டு அணிகளின் முதல் இன்னிங்ஸும் முடிவுக்கு வந்தது.

The Ashes 2025 Australia vs England Boxing Day Test - 20 Wickets Fall on Day 1 at MCG

ஆஸ்திரேலியா 152... அடேங்கப்பா இங்கிலாந்து பவுலிங்!

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், புற்கள் நிறைந்த அந்தப் பிட்ட்சை பார்த்துவிட்டு பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அவர் நினைத்தது போலவே நடந்தது. இங்கிலாந்தின் இளம் வீரர் ஜோஷ் டங் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்குத் தண்ணி காட்டினார்.

ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன் என ஜாம்பவான்கள் எல்லாம் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். உஸ்மான் கவாஜா மட்டும் தாக்குப்பிடித்து 29 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் எல்லாம் 'வரிசையில் வந்து டோக்கன் வாங்கிச் செல்வது' போல அவுட் ஆக, ஆஸ்திரேலியா வெறும் 152 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஜோஷ் டங் 5 விக்கெட்டுகளை அள்ளி அசத்தினார்.

"நீங்க 152 எடுத்தா... நாங்க 110 தான் எடுப்போம்!"

"அப்பாடா.. ஆஸ்திரேலியாவை குறைந்த ரன்னில் சுருட்டிட்டோம்" என இங்கிலாந்து ரசிகர்கள் கொண்டாடி முடிப்பதற்குள், அடுத்த சரிவு நடந்தது. "எங்கள் பிட்ச்சில் எங்களுக்கே ஆப்பா?" என வெகுண்டெழுந்த ஆஸ்திரேலிய பவுலர்கள், இங்கிலாந்தை அடித்து விரட்டினார்கள். மிட்செல் ஸ்டார்க் மற்றும் மைக்கேல் நேசர் கூட்டணி இங்கிலாந்தின் டாப் ஆர்டரை காலி செய்தது. ஒரு கட்டத்தில் 16 ரன்களுக்கு 4 விக்கெட் எனத் தள்ளாடியது இங்கிலாந்து.

ஹாரி புரூக் மட்டும் அதிரடியாக ஆடி 41 ரன்கள் எடுத்தார். ஆனால், உள்ளூர் ஹீரோ ஸ்காட் போலண்ட் வந்த பிறகு இங்கிலாந்தின் கதை முடிந்தது. 110 ரன்களுக்கு இங்கிலாந்து அணி மொத்தமாகச் சரணடைந்தது. மைக்கேல் நேசர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் நாள் ஆட்ட முடிவில், ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது ஆஸ்திரேலியா 46 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

ஏற்கெனவே ஆஷஸ் தொடரை 3-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றிவிட்ட நிலையில், இந்த 4-வது டெஸ்டிலும் இங்கிலாந்து படுமோசமாகச் சொதப்புவது அந்த அணியின் ரசிகர்களை விரக்தியின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. மெல்போர்ன் பிட்ச் பவுலர்களுக்கு சொர்க்கபுரிதான். ஆனால், ஒரே நாளில் 20 விக்கெட் விழும் அளவுக்கு பேட்ஸ்மேன்கள் ஆடிய விதம், "டெஸ்ட் கிரிக்கெட்டா இது?" எனப் பலரையும் கேள்வி கேட்க வைத்துள்ளது.

Story first published: Friday, December 26, 2025, 13:39 [IST]
Other articles published on Dec 26, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+