Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஷஸ் தொடரின் வரலாறு? முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்.. எந்த சேனல், ஒடிடியில் பார்க்கலாம்.. நேரம்?

பெர்த்: டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் பழமை வாய்ந்த பாரம்பரியமிக்க அஷஸ் தொடர் நாளை வெள்ளிக்கிழமை பெர்த் நகரில் தொடங்குகிறது. கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து அணி, 1882ஆம் ஆண்டு தனது சொந்த மண்ணில் லண்டன் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இதனை கண்டித்தும், கலாய்க்கும் விதமாக இங்கிலாந்து செய்தித் தாள் ஒரு இரங்கல் செய்தியை வெளியிட்டது.

இங்கிலாந்து கிரிக்கெட் இறந்து விட்டது. ஓவல் மைதானத்தில் புதைக்கப்பட்டு, அதன் சாம்பல் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது என கூறியது. இதனால் தான் இந்த தொடருக்கு ஆஷஸ் என பெயரிடப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை ஆஷஸ் தொடர் ஒரு மானப் பிரச்சினையாக இரு நாட்டுக்கும் மாறிவிட்டது.

The Ashes 2025

1882 ஆம் ஆண்டு இருந்து 2025 ஆம் ஆண்டு வரை 143 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த தொடரில் இதுவரை 361 போட்டிகள் நடந்திருக்கிறது. இதில் 152 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், 110 போட்டிகளில் இங்கிலாந்தும் வெற்றி பெற்று இருக்கிறது. 99 போட்டிகள் சமனில் முடிவடைந்து இருக்கிறது. ஒட்டுமொத்தமாக இதுவரை 73 ஆசஸ் தொடர் நடைபெற்றிருக்கிறது. இதில் ஆஸ்திரேலியா அணி 34 முறையும் இங்கிலாந்து அணி 32 முறையும் கைப்பற்றி இருக்கிறது.

7 போட்டிகள் சமனில் முடிவடைந்து இருக்கிறது.
தற்போது ஆசஸ் கோப்பை ஆஸ்திரேலியா கைவசம் இருக்கிறது. இங்கிலாந்து அணி தங்களது சொந்த மண்ணில் கடைசியாக இரண்டு முறை நடந்த தொடரிலும் ஆசஸ் கோப்பையை வெல்ல முடியவில்லை. தற்போது நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆஸ்திரேலியா மண்ணுக்கு பென் ஸ்டோக்ஸ் தலைமையில் ஆசஸ் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் அந்த அணி சென்றுள்ளது.

கடந்த முறை 4 க்கு 0 என்ற கணக்கில் தோல்வியை தழுவியதால் இம்முறை எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற உத்வேகம் அந்த அணிக்குள் இருக்கின்றது. ஒரு மாதத்திற்கு முன்பே ஆஸ்திரேலியா சென்று தற்போது அங்கு உள்ள உள்ளூர் அணிகளுடன் பயிற்சியில் விளையாடி வருகின்றனர். இங்கிலாந்து அணியில் ஹாரி புரூக், ஜாக் கிராலி, பென் டக்கட் போன்ற இளம் வீரர்களுடன் ஜோ ரூட் ,ஜோஃப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் களமிறங்கி உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்த பேட் கம்மின்ஸுக்கு பாயும் ஏற்பட்டிருக்கிறது. இதேபோன்று ஹேசல்வுட் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஸ்காட் போலண்ட் ஆகியோர் தான் வேகப்பந்து வீச்சு படையை கவனிக்க வேண்டும். பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுஷேன் அலெக்ஸ் கேரியுடன் ஜாம்பவான் ஸ்மித் இடம் பெற்றுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் பேட் கம்மின்ஸ் முதல் டெஸ்டில் காயம் காரணமாக விலகி இருப்பதால் ஸ்மித்துக்கு கேப்டன் பொறுப்பு தேடி வந்திருக்கிறது. ஸ்மித்துக்கு இது கடைசி தொடராக இருக்கும் என்பதால் கடைசியாக ஒரு முறை சாதனை படைக்கும் உத்வேகத்தில் இருக்கின்றார். சம பலத்துடன் ஆஸ்திரேலியாவில் இரு அணிகளும் களமிறங்குகிறது.

இதனால் ஆஸ்திரேலிய மண்ணில் வெல்லப் போவது யார்? பென் ஸ்டோக்ஸ் தனது பேஸ் பால் கிரிக்கெட் மூலம் சாதனை படைப்பாரா என்று பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தப் போட்டிகள் அனைத்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் பார்க்கலாம். முதல் போட்டி இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 7.50 மணிக்கு தொடங்குகிறது.

Story first published: Thursday, November 20, 2025, 10:33 [IST]
Other articles published on Nov 20, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+