Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஷஸ் டெஸ்ட்.. இங்கிலாந்தை கதறவிட்ட டிராவிஸ் ஹெட்.. பேஷ்பால்க்கு பதிலடி.. ஆஸ்திரேலியா அபார வெற்றி

பெர்த்: ஆசஸ் டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் 83 பந்துகளில் 123 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணியை ஊதி தள்ளினார்.

5 போட்டிகள் கொண்ட இந்த பாரம்பரியமிக்க டெஸ்ட் தொடரில் முதல் போட்டி பெர்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 172 ரன்களில் ஆட்டம் இழக்க, ஆஸ்திரேலிய அணி 132 ரன்களில் சுருண்டது.

Travis Head

இதன் மூலம் 40 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்த அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. இரண்டாவது முறையாவது பேட்டிங்கில் இங்கிலாந்து அணி ஜொலிக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதிகபட்சமாக அந்த அணியின் 37 ரன்களும் ஆலி போப் 33 ரன்கள் எடுக்க இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 164 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் வீழ்த்திய ஸ்டார்க், இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்ற ஸ்காட் போலந்து நான்கு விக்கெட்டுகள் எடுத்தார். இதனை அடுத்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. முதல் இன்னிங்ஸ் போல் ஆஸ்திரேலியாவும் தடுமாறும் என எதிர்பார்த்த இங்கிலாந்து ரசிகர்களுக்கு தூங்கா இரவுகளை பரிசளித்தார் டிராவிஸ் ஹெட். தொடக்க வீரராக களம் இறங்கி முதலில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அதன் பின் தன்னுடைய ருத்ர தாண்டவத்தை டிராவிஸ் ஹெட் காட்டினார். பேஸ் பால் என்பது பேட்டை கண்டபடி சுற்றி ஆட்டமிழப்பது இல்லை என இங்கிலாந்து வீரர்களுக்கு அதிரடியாக விளையாடி வெல்வது என்றால் என்ன என்பதை டிராவிஸ் ஹெட் சொல்லிக் கொடுத்தார்.

முதல் இன்னிங்சில் அதிவேகமாக பந்து வீசிய இங்கிலாந்து வீரர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறினர். அவர்களுடைய பந்து வீச்சு எந்த ஒரு நெருக்கடியும் தரவில்லை. இதனை பயன்படுத்திக்கொண்டு டிராவிஸ் ஹெட் 6 பவுண்டரி என பறக்க விட்டார் இதனால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது.தொடர்ந்து சிறப்பாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 69 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார்.

83 பந்துகளை எதிர்கொண்ட அவர் 123 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். இதில் 16 பவுண்டரிகளும் நான்கு சிக்ஸர்களும் அடங்கும். மறுமுனையில் மேனர்ஸ் லாபஸ்சென் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 49 பந்துகளில் 51 ரன்கள் சேர்க்க ஆஸ்திரேலிய அணி 28.2 ஓவர் எல்லாம் வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஆசஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Story first published: Saturday, November 22, 2025, 15:28 [IST]
Other articles published on Nov 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+