லீட்ஸ் : ஒரு கிரிக்கெட் தொடர் 140 ஆண்டுகளுக்கு மேல் நடைபெறுகிறது என்றால் அது எந்த அளவிற்கு மக்களிடையே பிரபலமாக இருந்திருக்கும். ஆசஸ் தொடர் இன்று வரை மக்களால் ரசிக்கப்படுவதற்கு காரணமே இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணி வீரர்களுக்கு இடையே நடைபெறும் மோதல்கள் தான்.
தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பாரிஸ்டோவை ஓவர் முடிந்தவுடன் அலெக்ஸ் காரி ரன் அவுட் செய்த விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது ஆஸ்திரேலிய வீரர்களை இங்கிலாந்து ரசிகர்களும் வீரர்களும் வச்சு செய்து வருகிறார்கள்.
லீட்ஸ் நகரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் முதலில் லிங்க்ஸில் ஆஸ்திரேலியா அணி 263 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி 237 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை எடுத்து 26 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

இதில் டேவிட் வார்னர் ஒரு ரன்னிலும் உஸ்மான் கவாஜா 43 ரன்களிலும் மார்னஸ் லாபஸ்சேன் 33 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இந்த நிலையில் அனுபவ வீரர் ஸ்மித் இரண்டு ரன்கள் எடுத்த நிலையில் மோயின் அலி பந்துவீச்சில் கேட்ச் ஆனார். அப்போது ஸ்மித் பெவிலியன் நோக்கி சென்ற நிலையில் விக்கெட் கீப்பராக நின்ற பாரிஸ்டோ, see you smudge என்று கூறினார். ஸ்மஜ் என்றால் மாசுபடுத்துதல் என்ற பொருளாகும். இதனை காதில் வாங்கிய ஸ்மித் கோபமானார் .
Jonny Bairstow's special send off for Steve Smith when he got out.
— CricketMAN2 (@ImTanujSingh) July 7, 2023
The Ashes at its Very Best.!! pic.twitter.com/HtMftnyrgK
உடனே திரும்பி ஹேய் என்று கத்தினார். இதற்கு மீண்டும் பதில் அளித்த பாரிஸ்டோ நான் சியர்ஸ் மீண்டும் உன்னை பார்க்கிறேன் என்று தான் கூறினேன் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். இதனால் ஸ்மித் கோபத்துடன் பெவிலியன் நோக்கி சென்று கொண்டிருந்தார். வீரர்கள் ஒருவரை ஒருவர் இது போல் திட்டிக் கொள்வது ஆட்டத்தில் அனலை அதிகப்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இங்கிலாந்தை விட ஆஸ்திரேலியா அணி தற்போது 142 ரன்கள் கூடுதலாக இருக்கிறது. இன்னும் மூன்று நாட்கள் எஞ்சி இருப்பது குறிப்பிடத்தக்கது.