For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஷஸ் 4வது டெஸ்ட்.. ஆஸ்திரேலிய அணி 317 ரன்களில் ஆல் அவுட்.. முன்னிலை பெறுமா இங்கிலாந்து

மான்செஸ்டர் : ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெறுகிறது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி 2க்கு1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

மான்செஸ்டர் நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரர் கவாஜா 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.

The Ashes 4th test - Australia is all out for 317 runs as chris woakes picks 5 wickets

இதனையடுத்து டேவிட் வார்னர் மற்றும் மார்னஸ் லாபஸ்சேன் ஜோடி சேர்ந்து அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வார்னர் 32 ரன்களில் வெளியேற, மார்னஸ் லாபஸ்சேன் 115 பந்துகளை எதிர்கொண்டு அரைசதம் கடந்த நிலையில், பெவிலியன் திரும்பினார்.

இதே போன்று அதிரடியாக விளையாட முயன்ற ஸ்மித் 52 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இதில் 5 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். டிராவிஸ் ஹெட் 48 ரன்களில் வெளியேற, சிறப்பாக விளையாடிய மிட்செல் மார்ஷ் 51 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

The Ashes 4th test - Australia is all out for 317 runs as chris woakes picks 5 wickets

கேமிரான் கிரின் 16 ரன்களிலும், அலெக்ஸ் கெரி 20 ரன்களிலும், வெளியேற ஸ்டார்க் பொறுமையாக விளையாடி 36 ரன்கள் சேர்த்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி 317 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து பந்துவீச்சு தரப்பில் கிறிஸ் வொக்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பிராட் 2 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன் 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது. பென் டக்கட் 1 ரன்னில் ஆட்டமிழக்க ஜாக் கிராலியும், 3வது விக்கெட்டுக்கு மோயின் அலியும் விளையாடி வருகின்றனர். ஹாரிஸ் புருக் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டார். ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை இங்கிலாந்து இந்த டெஸ்டிலாவது தாண்டுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Thursday, July 20, 2023, 17:18 [IST]
Other articles published on Jul 20, 2023
English summary
The Ashes 4th test - Australia is all out for 317 runs as chris woakes picks 5 wickets
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+