For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஷஸ் 5வது டெஸ்ட் - இங்கிலாந்து தலையில் டான்ஸ் ஆடும் சனி.. பிடிச்ச கேட்சை இப்படியா பண்ணுவீங்க -வீடியோ

லண்டன் : ஆசஸ் டெஸ்ட் தொடரில் ஐந்தாவது போட்டியில் இங்கிலாந்து அணி எப்படியாவது வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வேண்டும் என்று போராடி வருகிறது. ஆனால் இங்கிலாந்துக்கு சாதகமான சூழல் சுத்தமாக நிகழவில்லை.

இந்த நிலையில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 283 ரன்களில் சுருண்டது.

The Ashes 5th test - Ben stokes missed a catch chance of smith

இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 295 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்ஸில் ஸ்மித் ரன் அவுட் ஆகியும் பைல்ஸ் சரியாக விழவில்லை என்று கூறி ஆஸ்திரேலியாவுக்கு சாதகமான தீர்ப்பை நடுவர் வழங்கி விட்டார். இந்த நிலையில் இங்கிலாந்து அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி 395 ரன்கள் குவித்தது.

இதனை அடுத்து 384 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி விளையாடி வருகிறது. ஐந்தாவது நாள் தொடக்கத்தில் 135 ரன்கள் விக்கெட் ஏதுமின்றி ஆஸ்திரேலிய அணி விளையாடியது. டேவிட் வார்னர் 60 ரன்களிலும், உஸ்மான் கவஜா 72 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க மார்னஸ் லாபசேன் 13 ரன்களில் வெளியேறினார்.

இதனையடுத்து குக், மோயின் அலி ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் மோயின் அலி வீசிய பந்தில் ஸ்மித் அடிக்க முயன்ற போது அது கையில் பட்டு பின்னால் நின்று கொண்டிருந்த கேப்டன் ஸ்டோக்சிடம் கேட்ச் ஆனது. எனினும் அந்த கேட்சை பிடித்து கொண்டாடுவதற்குள் பந்து அவருடைய கையில் வழுக்கி விட்டு சென்றது.

இதனை அவுட் கேட்கலாமா வேண்டாமா என இங்கிலாந்து வீரர்கள் முழித்துக் கொண்டிருந்த நிலையில் ஸ்டோக்ஸ், டி ஆர் எஸ் கேட்டார். அப்போது ரீப்ளேவில் ஸ்மித் கையில் பட்டு தான் பந்து சென்றது என தெரிய வந்தது. ஆனால் ஸ்டோக்ஸ் அந்த கேட்சை பிடித்து பந்தை கையில் வைத்துக் கொள்ளாமல் கொண்டாடுகிறேன் என்ற பெயரில் பந்தை தூக்கி போட அது அவரது கையை விட்டு நழுவி சென்றது. இதனால் அவர் சரியாக கேட்ச் பிடிக்கவில்லை எனக் கூறி இதற்கு நடுவர் நாட் அவுட் வழங்கி விட்டார். இது ஆட்டத்தில் பெரும் திருப்புமுனையில் ஏற்படுத்தி இருக்கிறது .

தற்போது வரை ஆஸ்திரேலிய அணி 238 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. தற்போது மழையால் ஆட்டம் தடைப்பட்டு இருக்கிறது. 66 ஓவர் முடிவடைந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு இன்னும் 146 ரன்கள் தான் தேவைப்படுகிறது. இங்கிலாந்தின் வெற்றிக்கு ஏழு விக்கெட்டுகள் உள்ளது. இந்த ஆட்டம் சமனில் முடிவடைந்து விட்டால் ஆஸ்திரேலிய அணி ஆசஸ் தொடரை வென்று விடும்.

Story first published: Monday, July 31, 2023, 19:31 [IST]
Other articles published on Jul 31, 2023
English summary
The Ashes 5th test - Ben stokes missed a catch chance of smith ஆஷஸ் 5வது டெஸ்ட் - இங்கிலாந்து தலையில் டான்ஸ் ஆடும் சனி.. பிடிச்ச கேட்சே இப்படியா பண்ணுவீங்க -வீடியோ
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+