Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஷஸ் 5வது டெஸ்ட் - இங்கிலாந்து அணி வரலாற்று வெற்றி.. கடைசி பந்து வரை திரில்லர்.. பிராட் அபாரம்

லண்டன் : ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 5வது போட்டியில் இங்கிலாந்து அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி 2க்கு1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனால், இந்த தொடரை சமனில் முடிக்க இங்கிலாந்து அணி இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் களமிறங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

The Ashes 5th test - stuart broad fiery last spell made england beat australia by 49 runs

இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 283 ரன்களில் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸ் 295 ரன்கள் எடுத்தது. 12 ரன்கள் பின்தங்கிய நிலையில், இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. இதில் இங்கிலாந்து அணி 395 ரன்களை சேர்க்க, ஆஸ்திரேலிய அணிக்கு 384 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 60 ரன்களில் ஆட்டமிழக்கக, கவாஜா 72 ரன்கள் எடுத்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 140 ரன்கள் சேர்த்தது. மார்னஸ் 13 ரன்களில் வெளியேற, அந்த அணியின் நட்சத்திர வீரர் ஸ்மித் 54 ரன்கள் எடுத்த நிலையில், வொக்ஸ் பந்துவீச்சில் பெவிலியன் திருமபினார்.

சிறப்பாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 43 ரன்களில் மோயின் அலி பந்துவீச்சில் பெவிலியன் திரும்ப, ஆஸ்திரேலிய அணி சரிவை சந்திக்க நேர்ந்தது. மிட்செல் மார்ஷ் 6 ரன்களிலும், ஸ்டோக்ஸ் டக் அவுட்டாகியும் , பாட் கம்மின்ஸ் 9 ரன்களிலும் வெளியேற, இங்கிலாந்து வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. ஆஸ்திரேலிய அணியில் அலெக்ஸ் கேரி , இங்கிலாந்து அணியின் வெற்றியை தடுத்தார்.

இறுதியில், தனது கடைசி டெஸ்டில் விளையாடிய பிராட் , முர்பி மற்றும் அலெக்ஸ் கேரி விக்கெட்டை தனது அனுபவ பந்துவீச்சு மூலம் வீழ்த்த, இங்கிலாந்து அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா 2க்கு2 என்ற கணக்கில் வென்று சமனில் முடிந்தது. 4வது டெஸ்டில் மட்டும் மழை பெய்யாமல் இருந்திருந்தால், இந்நேரம் இங்கிலாந்து அணி தொடரை வென்று இருக்கும். இங்கிலாந்து மண்ணில் ஆஸ்திரேலிய அணி 21 ஆண்டுகளாக ஆஷஸ் தொடரை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, July 31, 2023, 23:23 [IST]
Other articles published on Jul 31, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+