Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வீடியோ - சக வர்ணனையாளர் தலையில் அடித்த நாசர் உசைன்.. நேரலையில் விமர்சித்ததால் பதிலடி

ஆசஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் போது சக வர்ணனையாளரின் தலையில் நாசர் உசேன் அடித்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது ஆசஸ் தொடரில் இங்கிலாந்து அணி ஒன்றுக்கு இரண்டு என்று கணக்கில் பின் தங்கி இருக்கிறது.

இதனால் மான்செஸ்டர் டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் நிலையில் இருக்கிறது. எனினும் மழை வந்து ஆஸ்திரேலியா அணியை காப்பாற்றி இருக்கிறது. கடைசி நாளில் முதல் செஷனில் ஒரு பந்து கூட வீச முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

The Ashes - Nasser Hussain slaps the cricket commentator mark butcher head

ஆஸ்திரேலிய அணி இன்னும் 61 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. இங்கிலாந்தின் வெற்றிக்கு ஐந்து விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. இந்த நிலையில் கிரிக்கெட் வர்ணனையில் முன்னாள் வீரர்கள் ஆசஸ் தொடரில் எடுக்கப்பட்ட மோசமான முடிவுகள் குறித்து பேசி வந்தனர்.அப்போது இங்கிலாந்து வீரர் மார்க் புச்சர், தனக்கு நாசர் உசேன், கேப்டனாக இருந்த போது எடுத்த முடிவு ஒன்று குறித்து பேசினார்.

அதில் 2002 ஆசஸ் தொடரில் நாங்கள் பிரிஸ்பேன் சென்றிருந்தோம். பிரிஸ்பேன் என்பது ஆஸ்திரேலியாவின் கோட்டையாக இருந்தது. அங்கு ஆடுகளம் நன்றாக பவுன்ஸ் ஆக இருக்கும். இதனால் பேட்டிற்கு பந்து நன்றாக வரும். ஆனால் கேப்டனாக இருந்த நாசர் உசேன், டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் மூலம் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடியது. அந்தப் போட்டியில் நாங்கள் 384 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினோம். இதற்கு நாசர் உசேன் தான் காரணம் என்று கிண்டலாக கூறினார்.

புச்சரின் இந்த குற்றச்சாட்டை கேட்ட நாசர் உசேன் அங்கிருந்து வந்து பின்னால் தலையில் ஓங்கி அடித்தார். இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியாக இருந்தாலும் அதனை மறைத்து இதனை நகைச்சுவையாக கடந்து சென்று விட்டனர். மார்க் புச்சரும், நாசர் உசேனும் நல்ல நண்பர்கள் என்பதால் அவரும் அதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.

மேலும் நாசர் உசேன் இப்படி செய்தவுடன், நேரலையிலே பாருங்கள் வேலை செய்யும் இடத்தில் எப்படி எங்களை நடத்துகிறார்கள் என்று கிண்டலாக மார்க் புச்சர் குற்றம் சாட்டினார். இந்த சம்பவத்தை கிரிக்கெட் வர்ணனையாளர்கள் நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு சென்றாலும் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது. நாசர் ஹுசைன் செய்தது தவறு என்று பலரும் குறிப்பிட்டு இருந்தார்கள்.

Story first published: Sunday, July 23, 2023, 17:19 [IST]
Other articles published on Jul 23, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+