For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் வரலாறு.. ஒரு meme ஆல் எழுந்த கிரிக்கெட் போர்.. அதிக முறை வென்றது ஆஸியா? இங்கி.?

பர்மிங்காம் : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஜூன் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் இங்கிலாந்தின் பிர்மிங்காம் தொடரில் நடைபெறுகிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் தங்களுக்குள் மோதி கொள்ளும் இந்தப் போட்டி ஒரு போருக்கு சமம் ஆனது.

உலகக் கோப்பையை விட ஆஷஸ் வெல்வது தான் முக்கியம் என்று இரு நாட்டு ரசிகர்களும் சொல்வார்கள் என்றால் அந்த அளவுக்கு ஒரு மானப் பிரச்சினையாக இது கருதப்படுகிறது. இந்த ஆஷஸ் தொடர் வரலாறு என்பது மிகவும் சுவாரஸ்யமானது.

லண்டன் ஓவல் மைதானத்தில் 1882ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் முறையாக தோல்வியை தழுவியது. இதனை கிண்டல் செய்யும் விதமாக, இங்கிலாந்து நாளிதழ், இங்கிலாந்து கிரிக்கெட் மரணித்துவிட்டதாகவும், எரிக்கப்பட்ட சாம்பலை ஆஸ்திரேலியாவுக்கு எடுத்து செல்லப்பட்டதாகவும், கண்ணீர் அஞ்சலி வடிவில் செய்தி வெளியிடப்பபட்டது.

The Ashes series 2023 - orgin and History of the greatest rivalry in test cricket

இதனால் கடுப்பான இங்கிலாந்து கேப்டன் இவோ பிரான்சிஸ் பிலிக், அந்த சாம்பலை நாங்கள் மீட்டு எடுத்து இங்கிலாந்து கூறி வருவோம் என்று உறுதி அளித்தார். அதே ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரை இங்கிலாந்து வென்றதை அடுத்து, ஆஸ்திரேலிய பெண்கள் சிலர், ஒரு சிறிய கோப்பை, ஸ்டம்பின் பைல்ஸ்களை எரித்து, அதன் சாம்பலை இங்கிலாந்து அணி கேப்டன் இவோ பிரான்சிஸ்க்கு வழங்கினர்.

அதை நினைவு கூறும் விதமாக, அத்ன் வடிவில் பிற்காலத்தில் ஆஷஸ் கோப்பையாக வழங்கப்பட்டது. இந்த பரிசு கோப்பையை அன்பளிப்பாக வழங்கிய ஃபுளேரான்ஸ் பார்பி என்ற பெண்ணையே திருமணம் செய்து கொண்டார் இவோ பிரான்சிஸ். அதிலிருந்து 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆஷஸ் தொடர், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் மாறி மாறி நடைபெறுகிறது.

இதுவரை 72 ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்றுள்ளது. இதில் 34 ஆஷஸ் தொடரை, ஆஸ்திரேலியாவும், 32 ஆஷஸ் தொடரை இங்கிலாந்தும் வென்று இருக்கிறது. 6 முறை தொடர் சமனில் முடிவடைந்திருக்கிறது.

Story first published: Thursday, June 15, 2023, 13:23 [IST]
Other articles published on Jun 15, 2023
English summary
The Ashes series 2023 - orgin and History of the greatest rivalry in test cricket
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+