Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் ஆஷஸ் டெஸ்ட்- இங்கிலாந்தின் முக்கிய வீரர் விலகியதால் சோகம்..!!

பிரிஸ்பேன்- பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளை பிரிஸ்பேன் நகரில் தொடங்குகிறது.

Recommended Video

Ashes 2021: England rest James Anderson for the Brisbane Test | OneIndia Tamil

இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதுவதை காண உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இந்த நிலையில், பிரிஸ்பேனில் மழை பெய்து வருவதால் இங்கிலாந்து அணி வீரர்களால் பயிற்சி மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது.

ஓய்வு

ஓய்வு

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் டெஸ்ட்டில் விளையாடபோவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 39 வயதான ஆண்டர்சனுக்கு, இது 5வது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணமாகும். வயது அதிகமாகி விட்டதால், காயம் எற்படாமல் தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிளான்

பிளான்

முன் எப்போதும் இல்லாத வகையில் இம்முறை ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 2 பகல் இரவு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. பிங்க் நிற பந்து இரவு நேரத்தில் நல்ல ஸ்விங் ஆகும். இதனால் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சனின் பங்கு மிகவும் முக்கியம் என்பதால் இந்த ஓய்வு அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

5 போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டிகளில் மட்டும் விளையாட முடிவு எடுத்துள்ளதாக ஆண்டர்சன் கூறியுள்ளார். ஆண்டர்சனின் இந்த முடிவு ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மகிழ்ச்சியை தரும் என்பதில் சந்தேகமில்லை.இதே போன்று இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் முழு உடல் தகுதியுடன் உள்ளாரா என்றும் தெரியவில்லை.

குழப்பம்

குழப்பம்

இதனால் அவரை 4வது வேகப்பந்துவீச்சாளராக பயன்படுத்தி, கூடுதலாக ஒரு சுழற்பந்துவீச்சாளரை சேர்க்கலாமா இல்லை பிராட், ராபின்சன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் என 4 வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடலாமா என்ற குழப்பத்தில் இங்கிலாந்து அணி நிர்வாகம் உள்ளது. பிரிஸ்பேன் காபா மைதானத்தில் கடந்த 35 ஆண்டுகளாக இங்கிலாந்து வென்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, December 7, 2021, 17:15 [IST]
Other articles published on Dec 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+