For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இன்று தொடங்கும் ஆஷஸ் தொடர்.. தயாராக நிற்கும் ஆஸ்திரேலியா.. பழிவாங்க காத்திருக்கும் இங்கிலாந்து!

லண்டன்: "ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் ஆஷஸ் தொடரில் விளையாடும்.. அல்லது ஆஷஸ் தொடருக்கான பயிற்சியில் ஈடுபடும்" ஆஷஸ் தொடர் பற்றி வர்ணனையாளர்கள் இப்படிதான் வர்ணிப்பார்கள். அந்த அளவிற்கு இரு அணிகளாலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு விளையாடப்படுவதே ஆஷஸ் தொடராகும். நூறாண்டுக்கு மேலாக நடக்கும் பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் கவுரவத்துக்காக களத்தில் விளையாடுவார்கள்.

ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கும் ஒரு முறை நடத்தப்படும் ஆஷஸ் தொடரை 34 முறை ஆஸ்திரேலியாவும், 32 முறை இங்கிலாந்தும் கைப்பற்றியுள்ளார்கள். 6 முறை ஆஷஸ் தொடர் டிராவில் முடிந்துள்ளது. கடைசியாக 2021-22ஆம் ஆண்டில் சொந்த மண்ணில் நடந்த ஆஷஸ் கோப்பையை 4-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. ஆனால் இங்கிலாந்து மண்ணில் 2001-ம் ஆண்டுக்கு பிறகு ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா வென்றது கிடையாது.

The Ashes Test series Between England - Australia to Start from today at Birmingham

தற்போதைய ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பென் ஸ்டோக்ஸ் - பயிற்சியாளர் மெக்கல்லம் கூட்டணி சேர்ந்த பிறகு இங்கிலாந்து அணி 13 டெஸ்டில் விளையாடி 11 போட்டிகளில் வென்றுள்ளது. போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, டக்கெட், ஹாரி புரூக் என்று இங்கிலாந்து அணியில் திறமையான பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடி வருகிறார்கள்.

மூத்த வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆஸ்திரேலியாவை சீர்குலைக்கும் நம்பிக்கையுடன் ஆயத்தமாகி வருகிறார்கள். 40 வயதான ஆண்டர்சனுக்கு இது 180வது டெஸ்ட் போட்டியாகும். அவர் இன்னும் 15 விக்கெட் வீழ்த்தினால் 700 விக்கெட் மைல்கல்லை எட்டிய முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைப்பார்.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி என்று உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கிறார்கள். அதேபோல் கம்மின்ஸ், லயன், போலாந்த், மிட்செல் ஸ்டார்க், ஹேசல்வுட் என்று வேகப்பந்துவீச்சாளர்களும் இங்கிலாந்து அணியை திணறடிக்க முனைப்புடன் உள்ளனர். இன்னொரு பக்கம் ஆஸ்திரேலிய அணியை வம்புக்கு இழுக்க 'பார்மி ஆர்மி' ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இதனால் ஆஷஸ் தொடர் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Friday, June 16, 2023, 8:08 [IST]
Other articles published on Jun 16, 2023
English summary
The Ashes: Historic Ashes Test Tournament between Australia and England to start from Today at Edgbaston. WTC Australia to play against Baz Ball England is the expectation raising amoung the fans.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+