For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அருகருகே வந்த ரோஹித்-கோலி.. இவங்களுக்கு இடையில் ஏதோ பெரிய பிரச்சனை.. இந்த வீடியோவை பாருங்க புரியும்

சென்னை: இந்திய அணியின் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் கோலிக்கு இடையில் மோதல் இருப்பதாக செய்திகள் வெளியாகும் நிலையில் இது தொடர்பாக வீடியோ ஒன்றும் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தாலும் உடனே மீண்டும் வந்து இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி வென்றுள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் இந்தியா மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பி உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக ரோஹித், அஸ்வின் அடித்த சதம், அஸ்வின் அக்சர் எடுத்த 5 விக்கெட்டுகள் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக மாறியுள்ளது.

மூத்த வீரர்கள்

மூத்த வீரர்கள்

இந்த நிலையில் இந்திய அணியின் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் கோலிக்கு இடையில் மோதல் இருப்பதாக செய்திகள் வெளியாகும் நிலையில் இது தொடர்பாக வீடியோ ஒன்றும் வெளியாகி உள்ளது. பல மாதங்களாக இவர்களுக்கு இடையில் பிரச்சனை இருப்பதாக செய்திகள் வருகிறது.

இந்திய கேப்டன்

இந்திய கேப்டன்

யார் இந்திய அணியின் கேப்டன் என்பது தொடர்பாக இவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது மோதலாக மாறியதாக கூறப்பட்டது. அதன்பின் பிசிசிஐ அதிகாரிகள் இவர்களுக்கு இடையில் வீடியோ கால் செய்தனர். இதன் மூலம் இவர்களுக்கு இடையில் சமாதானம் பேசப்பட்டது.

பேசுவது இல்லை

பேசுவது இல்லை

அதன்பின் இந்திய அணி என்ற ஒரே காரணத்திற்காக இவர்கள் ஒன்றாக களமிறங்கி ஆடி வருகிறார்கள். மைதானத்தில் பெரிய அளவில் இவர்கள் பேசிக்கொள்வது இல்லை. இருவரும் ஒன்றாக பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்து பேட்டிங் செய்யவும் இல்லை.

வைரல்

இந்த நிலையில் நேற்று போட்டிக்கு பின் இவர்கள் செய்த காரியம் வைரலாகி வருகிறது. போட்டிக்கு பின் ரோஹித் கோலியை கட்டிபிடிக்க செல்லும் போது என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி உள்ளனர். கட்டிப்பிடிப்பதா, கை கொடுப்பதா என்று தெரியாமல் குழம்பி உள்ளனர்.

பிசிசிஐ

பிசிசிஐ வீடியோவில் இது அப்பட்டமாக தெரிகிறது. சண்டை போட்ட இரண்டு பேர் விருப்பமே இன்றி கை கொடுப்பது போல இவர்கள் கை கொடுத்து கொண்டனர். இதை நெட்டிசன்களும் குறிப்பிட்டுள்ளனர். இருவரும் நடந்துகொள்ளும் விதத்தை பார்த்தாலே தெரிகிறது.

நண்பர்கள் இல்லை

இவர்கள் இருவரும் நண்பர்கள் இல்லை. இந்திய அணிக்காக மட்டுமே இவர்கள் ஆடுகிறார்கள். அதை தவிர வேறு எதுவும் இல்லை.முன்னாள் காதலர்கள் கூட இப்படி நடந்து கொள்ள மாட்டார்கள் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Story first published: Wednesday, February 17, 2021, 14:23 [IST]
Other articles published on Feb 17, 2021
English summary
The awkward hug between Kohli and Rohit after India vs England second test goes viral
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+