சிறப்பான ஆல்-ரவுண்டர்... 2016ல இருந்து டெஸ்ட் போட்டிகள்ல இவர்தான் முன்னிலை!
மெல்போர்ன் : சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆல்-ரவுண்டராக இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா உள்ளார்.
கடந்த 2016லிருந்து சிறப்பான ஆல்-ரவுண்டராக இவர் உள்ளார். பேட்டிங்கில் 46.29 சராசரியும் பௌலிங்கில் 24.94 சராசரியும் இவருக்கு உள்ளது.
இவரை தொடர்ந்து இந்த பட்டியலில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் மற்றும் வங்கதேசத்தின் அல் ஹசன் உள்ளனர்.

இன்றைய ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா அவுட் ஆகாமல் 40 ரன்களை அடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2016ல் இருந்து டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆல் -ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா திகழ்ந்து வருகிறார். இவரது பேட்டிங் மற்றும் பௌலிங் சராசரியாக 46.29 மற்றும் 24.94 உள்ளது.
பேட்டிங், பௌலிங்கில் மட்டுமின்றி பீல்டிங்கிலும் ஜடேஜா சிறப்பான ஆட்டங்களை தந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் மற்றும் வங்கதேசத்தின் ஷாஹிப் அல் ஹசன் ஆகியோர் உள்ளனர்.


Click it and Unblock the Notifications