சூப்பர் இடம்... போஸ் கொடுக்காம இருந்தா எப்படி? டிவிட்டரில் புகைப்படம் வெளியிட்ட சஹல்
துபாய் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சேர்ந்த லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சஹல் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக தன்னுடைய அணியினருடன் துபாய் சென்றுள்ளார்.
Recommended Video
அங்கு தன்னுடைய ஹோட்டல் அறையின் அருகில் ஒரு மிகவும் பிடித்து போய்விட்டதாம். உடனே போஸ் கொடுத்து அதை டிவிட்டரிலும் பதிவிட்டுள்ளார்.
இந்த மாத துவக்கத்தில் நடன இயக்குநர் தன்ஸ்ரீ வர்மா என்பவருடன் யுஸ்வேந்திர சஹலுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
யூஏஇயில் அடுத்த மாதம் 19ம் தேதி துவங்கி 53 நாட்கள் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சார்பில் விளையாடவுள்ளார் லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சஹல். இதையொட்டி துபாய்க்கு தன்னுடைய அணியினருடன் சென்றுள்ள சஹல், அங்கு ஒரு இடத்தின் இயற்கை அழகில் லயித்து அது போஸ் கொடுக்க சிறந்த இடம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புகைப்படத்தை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். சுற்றிலும் பசுமையுடன் அழகாக காட்சியளிக்கிறது அந்த இடம்.

நடன இயக்குநர் தன்ஸ்ரீ வர்மாவுடன் இந்த மாத துவக்கத்தில் யுஸ்வேந்திர சஹலுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது துபாயில் குவாரன்டைனில் சஹல் உள்ளார்.


Click it and Unblock the Notifications