Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நியூ.சிக்கு எதிரான இன்றைய போட்டியில் சூதாட்டம்.. உருள காத்திருக்கும் தலைகள்.. என்ன நடந்தது?

புனே: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடக்க இருக்கிறது. இந்த போட்டி ஒருநாள் தொடரை முடிவு செய்யும் வல்லமை கொண்டதால் அதிக அளவில் எதிர்பார்க்கப்படுகிறது .

இந்த நிலையில் இந்த நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பெரிய அளவில் நடக்க இருந்த சூதாட்டம் கடைசி நொடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கடைசி நேர சூதாட்ட புகார் காரணமாக பிசிசிஐ அதிர்ச்சி அடைந்துள்ளது.

இந்த திடீர் புகார் காரணமாக இந்திய கிரிக்கெட் உலகில் மிக முக்கியமான பெரிய தலைகள் பலர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த விசாரணையை விரைவில் தொடங்க இருக்கிறது பிசிசிஐ.

 இரண்டாவது ஒருநாள் போட்டி

இரண்டாவது ஒருநாள் போட்டி

முதல் ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்திடம் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான மிக முக்கியமான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடக்க இருக்கிறது. இந்த போட்டி இந்த ஒருநாள் தொடரை எல்லா வகையில் மாற்றும் போட்டியாகும். இன்று மதியம் மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் இந்த போட்டி நடக்க இருக்கிறது. பெரும்பாலும் இந்திய அணியில் எந்த மாற்றமும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே பேட்டிங் ஆர்டரும் தொடரும் என கூறப்படுகிறது.

 போட்டியில் சூதாட்டம் நடக்குமா..?

போட்டியில் சூதாட்டம் நடக்குமா..?

இந்த நிலையில் இன்று நடக்க இருக்கும் இந்த போட்டியில் சூதாட்டம் நடக்க இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய 'ஸ்டிங் ஆபரேஷனில்' நிறைய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி பத்திரிக்கையாளர்கள் சிலர் சூதாட்ட கும்பல் போல பேசி இன்று போட்டி நடக்க இருக்கும் பிட்சில் சில மாற்றங்களை செய்ய சொல்லி இருக்கின்றனர். அதன்படி பிட்சை நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றவாறு மற்றும்படி கூறியுள்ளனர். இதற்கு அந்த பிட்சின் பராமரிப்பாளர் உடனே ஒப்புக் கொண்டு இருக்கிறார். இதற்காக அவர் பேரம் வேறு பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் பிட்சில் நடப்பது, காலால் சில இடங்களை சேதப்படுத்துவது என சில செயல்களை செய்து இருக்கிறார்.

 பெரிய ஆட்களுக்கு காசு தர வேண்டும்

பெரிய ஆட்களுக்கு காசு தர வேண்டும்

இந்த நிலையில் அவர் பேரம் பேசிய போது சில பெரிய ஆட்களுக்கும் பணம் தர வேண்டும் என்று கேட்டு இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் ''நீங்கள் எப்படி நினைக்கிறீர்களோ அப்படி பிட்சை மாற்றித் தருகிறேன். இதெல்லாம் எனக்கு சாதாரண விஷயம்'' என்று கூறியிருக்கிறார். முக்கியமாக ''இந்திய அணி பவுலர்கள் பந்துகளில் மட்டும் அதிக ரன் போகும்படி ஏற்படுத்தி தருகிறேன்'' என்றும் கூறியிருக்கிறார்.

 விஸ்வரூபம் ஆகும் பிரச்சனை

விஸ்வரூபம் ஆகும் பிரச்சனை

இந்த "ஸ்டிங் ஆபரேஷன்" நடத்திய அணியில் பிசிசிஐ அதிகாரி ஒருவரும் இருந்திருக்கிறார். இந்த நிலையில் அந்த பிட்ச் பராமரிப்பாளரிடம் விசாரணை நடத்தப்பட இருக்கின்றது. அவர் கூறிய பெரிய தலைகள் யார் யார் என்று விசாரிக்கப்பட இருக்கின்றது. மேலும் இதற்கு முன் புனே பிட்சில் இது போல ஏதேனும் மாற்றங்கள் நடந்து இருக்கின்றதா என்றும் சோதனை செய்யப்பட இருக்கின்றது.

Story first published: Wednesday, October 25, 2017, 13:50 [IST]
Other articles published on Oct 25, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+