For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா ஆடும் போட்டிகளை வைத்து.. ஐபிஎல் பிரச்சினையை தீர்க்கப் போறோம்.. பிசிசிஐ அதிரடி திட்டம்!

டெல்லி : ரன் அவுட்டுகளை கண்காணிக்க வைக்கப்பட்டுள்ள கேமராக்களின் உதவியுடன் நோ -பால் பிரச்சினையை தீர்க்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்த செயல்பாட்டை வரும் 6ம் தேதி துவங்கவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான தொடரிலும் பயன்படுத்த தீர்மானித்துள்ளது.

உலக அளவில் பிரச்சினைக்குரிய விஷயமாக நோ -பால் பிரச்சினை உள்ளது. கடந்த ஐபிஎல் தொடரிலும் நோ -பால் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது.

கடந்த வங்கதேசத்திற்கு எதிரான தொடரின் இரண்டாவது போட்டியில் ரன் அவுட்டுகளை கண்காணிப்பதற்காக வைக்கப்பட்ட கேமராக்களின் உதவியுடன் நோ பால் பிரச்சினை அணுகப்பட்டது.

 ரன் அவுட் கேமராக்களை பயன்படுத்த திட்டம்

ரன் அவுட் கேமராக்களை பயன்படுத்த திட்டம்

உலக அளவில் பிரச்சினைக்குரிய விஷயமாக நோ -பால் விவகாரம் உள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் இந்த பிரச்சினை உலகளவில் கவனத்தை பெற்றது. இந்நிலையில் ரன் அவுட்டுகளை கண்காணிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள கேமராக்களின் உதவியுடன் இந்த பிரச்சினையை அணுக பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

 ரன்-அவுட் கேமராக்களுடன் அணுகப்பட்ட நோ -பால்

ரன்-அவுட் கேமராக்களுடன் அணுகப்பட்ட நோ -பால்

நோ பால்களை உடனக்குடன் கண்காணிப்பதில் அம்பயர்களுக்கு சிரமம் நிலவுகிறது. இதையடுத்து தற்போது ரன் அவுட்டுகளுக்காக வைக்கப்பட்டுள்ள கேமராக்களின் உதவியுடன் நோ -பாலை கண்காணிக்க பிசிசிஐ முடிவு செய்து கடந்த வங்க தேத்திற்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற பகலிரவு போட்டிகளில் இதை நடைமுறைப் படுத்தியது.

 நோ -பால்களை கண்காணிக்க கேமராக்கள்

நோ -பால்களை கண்காணிக்க கேமராக்கள்

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக வரும் 6ம் தேதி முதல் நடைபெறவுள்ள போட்டிகளில், ரன் அவுட்டுகளுக்காக வைக்கப்பட்டுள்ள கேமராக்களை கொண்டு நோ பாலை கண்காணிக்கும் நடைமுறை தொடரப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

 புதுமைகளை செயல்படுத்தும் ஐபிஎல்

புதுமைகளை செயல்படுத்தும் ஐபிஎல்

புதிய முயற்சிகளுக்கு வரவேற்பளிக்கும் ஐபிஎல் போட்டிகளில், தற்போது ரன் அவுட் கேமராக்களை பயன்படுத்தி நோ பால் தொடர்பான பிரசசினையை தீர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொழில்நுட்பம் இருக்க எதற்காக நமது வீரர்கள் கவலை கொள்ள வேண்டும் பிசிசிஐ இணை செயலாளர் ஜெயேஷ் ஜார்ஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

 மேற்கிந்திய தீவுக்கெதிரான போட்டி

மேற்கிந்திய தீவுக்கெதிரான போட்டி

இதுகுறித்து மிகப்பெரிய அளவில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான தொடரிலும் சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் ஜெயேஷ் தெரிவித்துள்ளார்.

 ஐபிஎல் நிர்வாகிகளுடன் ஆலோசனை

ஐபிஎல் நிர்வாகிகளுடன் ஆலோசனை

சரியான முறையில் இந்த சோதனைகள் நடைபெற்றால், இதை அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் செயல்படுத்த ஐபிஎல் நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயேஷ் கூறியுள்ளார்.

 3வது 4வது அம்பயர் அல்ல

3வது 4வது அம்பயர் அல்ல

மேலும் நோ பாலை கண்காணிக்க மட்டுமே தனி அம்பயரை நியமிக்க ஐபிஎல் நிர்வாகிகள் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் 3வது மற்றும் 4வது அம்பயர் அல்ல என்றும் ஜெயேஷ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Sunday, December 1, 2019, 18:52 [IST]
Other articles published on Dec 1, 2019
English summary
BCCI testing the No ball Issue with the Run-out Cameras
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+