Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்த அணியாவது சரியாக இருக்குமா? தெ.ஆ.விற்கு எதிரான அணியை தேர்ந்தெடுக்கும் புதிய தலைமை தேர்வாளர்

மும்பை : இந்த வாரத்திற்குள் புதிய தலைமை தேர்வாளர் மற்றும் உறுப்பினர் ஒருவரை தேர்ந்தெடுக்கும் பணி நிறைவடையும் என்று பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது.

Recommended Video

CAC to Shortlist Candidates for BCCI Selectors' Job

இதற்காக கிரிக்கெட் ஆலோசனைக் குழு நாளை மும்பையில் கூடி, விண்ணப்பங்களை ஷார்ட் லிஸ்ட் செய்யவுள்ளதாகவும் பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் மற்றும் தேர்வாளர் ககன் கோடாவின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், இந்த வாரத்திற்குள் இவர்களுக்கு மாற்று தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவார்கள் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தலைவர் தேர்ந்தெடுக்கும் பணி

புதிய தலைவர் தேர்ந்தெடுக்கும் பணி

தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் மற்றும் தேர்வாளர் ககன் கோடா ஆகியோரின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் அவர்களுக்கு மாற்றாக புதிய தலைவர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த இரண்டு பதவிகளுக்கென 44 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் ஆலோசனை

மும்பையில் ஆலோசனை

புதிய தேர்வாளர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் மதன் லால், ஆர்பி சிங் மற்றும் சுலக்ஷனா நாயக் ஆகியோர் ஈடுபட உள்ளதாக முன்னதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. இந்நிலையில், மும்பையில் நாளை கூடும் இந்த குழுவினர், புதிய தேர்வாளர்களுக்கான விண்ணப்பங்களை ஷார்ட் லிஸ்ட் செய்யவுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் ஆலோசனை

மும்பையில் ஆலோசனை

தேர்வாளர்கள் பணிக்கென இவர்கள் ஷார்லிஸ்ட் செய்யும் நபர்கள், நேரடி நேர்காணலில் பங்கேற்று அதையடுத்து புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தலைமை தேர்வாளர் மற்றும் தேர்வாளர் பணிக்கான இந்த தேர்வுப்பணி இந்த வாரத்திற்குள் நடத்தப்பட்டு புதிய தேர்வாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று ஆலோசனைக் குழு உறுப்பினர் மதன் லால் தெரிவித்துள்ளார்.

புதிய தேர்வாளர்கள் தேர்ந்தெடுப்பு

புதிய தேர்வாளர்கள் தேர்ந்தெடுப்பு

வரும் 12ம் தேதி தர்மசாலாவில் துவங்கும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணியை இந்த புதிய தேர்வாளர்கள் தேர்ந்தெடுக்க உள்ளதாக பிசிசிஐ தரப்பில் முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வாரத்திற்குள் தேர்ந்தெடுக்கப்படவுள்ள பதிய உறுப்பினர்கள் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இந்திய அணியை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

கடுமையான விமர்சனங்கள்

கடுமையான விமர்சனங்கள்

தலைமை தேர்வாளராக இருந்த எம்எஸ்கே பிரசாத் தலைமையில் இந்திய அணியில் பல நேரங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வந்தன. எம்எஸ்கே பிரசாத்தின் இத்தகைய நடவடிக்கைகள் பல்வேறு தரப்பினர் இடையில் பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்து வந்தது. இந்நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்படவுள்ள தலைமை தேர்வாளர் பல்வேறு தரப்பில் கவனம் பெறுகிறார்.

Story first published: Monday, March 2, 2020, 18:56 [IST]
Other articles published on Mar 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+