Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியை வீழ்த்த முடியாது.. எதிரணிக்கு ரஹானேவின் சதம் கொடுத்த மெசேஜ்... கவாஸ்கர் பாராட்டு

மெல்போர்ன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் கேப்டன் அஜிங்க்யா ரஹானே தனது சதத்தை அடித்துள்ளார். இதன்மூலம் இந்தியா சிறப்பான முன்னிலை பெற்றது.

The hundred by Rahane will be one of the most important hundreds in Indian cricket history -Gavaskar

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே ரஹானேவின் இந்த சதம் மிகவும் முக்கியமானது என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் அடிலெய்டில் நடைபெற்ற பகலிரவு போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 36 ரன்களில் சுருண்டது. இந்த சொற்ப ரன்கள் இந்தியாவின் திறனை கேள்விக்குள்ளாக்கியது. இந்நிலையில் தற்போது இரு அணிகளும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் கேப்டன் ரஹானே சதமடித்து இந்திய அணியின் ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளார்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே ரஹானேவின் இந்த சதம் மிகவும் முக்கியமானது என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். கடந்த போட்டியில் 36 ரன்களில் இந்தியா சுருண்ட நிலையில், தங்களை யாரும் எளிதில் வீழ்த்திவிட முடியாது என்ற மெசேஜை ரஹானேவின் இந்த சதம் எதிரணியினருக்கு கொடுத்துள்ளதாகவும் கவாஸ்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, December 28, 2020, 19:17 [IST]
Other articles published on Dec 28, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+