Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுதாண் டா பைனல்.. 3 பந்தில் 4 ரன் தேவை.. தீப்தி சர்மா சம்பவம்.. ஹன்ட்ரட் கப் வென்ற லண்டன் ஸ்பிரிட்

லார்ட்ஸ்: இங்கிலாந்தில் நடைபெற்ற ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரின் மகளிர் பிரிவு இறுதிப் போட்டியில் வெல்ஷ் ஃபயர் அணிக்கு எதிராக இந்திய வீராங்கனை தீப்தி சர்மா சிக்ஸ் அடித்து லண்டன் ஸ்பிரிட் அணியை வெற்றி பெற வைத்தார். இதன் மூலம் லண்டன் ஸ்பிரிட் அணி முதன்முறையாக ஹண்ட்ரட் கோப்பையை வென்றது.

கடைசி 3 பந்துகளில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பரபரப்பான சூழ்நிலையில் தீப்தி சர்மா சிக்ஸ் அடித்து லண்டன் அணியை வெற்றி பெற வைத்தார். அந்த பந்தை கேட்ச் பிடிக்க வாய்ப்பு இருந்தும் வெல்ஷ் அணியின் ஷப்னிம் இஸ்மாயில் அந்த வாய்ப்பை தவறவிட்டார். இதை அடுத்து லண்டன் ஸ்பிரிட் 2024 மகளிர் ஹண்ட்ரட் கோப்பையை வென்றது.

Deepti Sharma The Hundred


முன்னதாக இந்தப் போட்டியில் வெல்ஷ் ஃபயர் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 100 பந்துகளில் 8 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஜெஸ் ஜோனாசன் அதிரடியாக ஆடி 41 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து இருந்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களே எடுத்து இருந்தனர். அந்த அணியில் ஒருவர் கூட சிக்ஸ் அடிக்கவில்லை. அதனாலேயே அந்த அணியால் 115 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதை அடுத்து 116 ரன்கள் தேவை என்ற இலக்குடன் லண்டன் ஸ்பிரிட் அணி களமிறங்கியது. அந்த அணியின் துவக்க வீராங்கனை மெக் லானிங் 4 ரன்களில் ஆட்டம் இழந்தார். மற்றொரு துவக்க வீராங்கனை ஜார்ஜியா 32 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த கொர்டேலியா 10 ரன்கள் எடுத்து நடையைக் காட்டினார்.

கேப்டன் ஹீத்தர் நைட் 24 ரன்களும், டேனியல் கிப்சன் 9 பந்துகளில் 22 ரன்களும் சேர்த்தனர். ஆறாவது வரிசையில் களமிறங்கிய இந்திய ஆல் ரவுண்டர் தீப்தி சர்மா நிதானமாகவே ஆடினார். அவர் கடைசி ஓவருக்கு முன் 14 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். கடைசி 5 பந்துகளில் 6 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. முதல் 2 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தது லண்டன் அணி.

கடைசி 3 பந்துகளில் 4 ரன்கள் தேவை என்ற நிலையில் பவுண்டரி அடித்தால் எளிதாக வெற்றி பெறலாம் என்ற நிலை இருந்தது. அப்போது தீப்தி சர்மா அதிரடியாக ஒரு சிக்ஸ் அடித்தார். ஷப்னிம் இஸ்மாயில் அந்த பந்தை கேட்ச் பிடிக்க முயன்றார். அதற்கு வாய்ப்பு இருந்தும் அவர் பவுண்டரி எல்லையில் தடுமாறி அதை தவறவிட்டார். இதை அடுத்து சிக்ஸ் அடித்து தீப்தி சர்மா லண்டன் அணியை வெற்றி பெற வைத்தார். லண்டன் ஸ்பிரிட் அணி முதல்முறையாக ஹண்ட்ரட் கோப்பையை வென்று வரலாறு படைத்தது.

Story first published: Monday, August 19, 2024, 8:03 [IST]
Other articles published on Aug 19, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+