Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பத்தாண்டுகளுக்கான ஒருநாள், டி20 போட்டிகளின் மகளிர் அணிகள்... ஐசிசி அறிவிப்பு

டெல்லி : கடந்த 10 ஆண்டுகளுக்கான ஐசிசியின் சிறப்பான அணிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட்டின் 3 வடிவங்களில் இந்த அணிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஒருநாள் மற்றும் டி20 வடிவங்களின் பெண்கள் அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

ஐசிசி அறிவிப்பு

ஐசிசி அறிவிப்பு

ஐசிசியின் கடந்த 10 ஆண்டுகளுக்கான 3 வடிவங்களின் அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி விருதுக்குரிய இந்த அணிகளின் பட்டியலில் கேப்டன் விராட் கோலி, முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டின் துணை கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஸ்பின்னர் ஆர் அஸ்வின் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

ஒருநாள் மகளிர் அணி அறிவிப்பு

ஒருநாள் மகளிர் அணி அறிவிப்பு

இதனிடையே, கடந்த 10 ஆண்டுகளுக்கான ஒருநாள் போட்டிகளுக்கான மகளிர் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் மிதாலி ராஜ், ஜூலான் கோஸ்வாமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதேபோல அலிசா ஹீலி, சூசி பேட்ஸ், எல்லிஸ் பெர்ரி உள்ளிட்ட வீராங்கனைகளும் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர்.

டி20 மகளிர் அணி அறிவிப்பு

டி20 மகளிர் அணி அறிவிப்பு

இதேபோல கடந்த 10 ஆண்டுகளுக்கான மகளிர் டி20 போட்டிகளுக்கான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் பூனம் யாதவ் இடம் பெற்றுள்ளனர். ஆஸ்திரேலிய மகளிர் கேப்டன் மெக் லானிங் இந்த அணிக்கும் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

துணை வீரர், வீராங்கனை அறிவிப்பு

துணை வீரர், வீராங்கனை அறிவிப்பு

கடந்த 10 ஆண்டுகளின் சிறந்த துணை வீரருக்கான விருது ஸ்காட்லாந்தை சேர்ந்த கெய்ல் கொய்ட்சிற்கும் மற்றும் சிறந்த துணை வீராங்கனைக்கான விருது ஸ்காட்லாந்தை சேர்ந்த கேத்ரீன் ப்ரைசிற்கும் வழங்கப்படவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் கிரிக்கெட்டில் சிறப்பான சாதனை செய்தவர்களுக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, December 27, 2020, 17:02 [IST]
Other articles published on Dec 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+