Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய கிரிக்கெட் அணியின் தோல்விக்கு சீருடை கலரை மாற்றியதுதான் காரணம்: வீரர்கள் புகார்

மும்பை: நைக் நிறுவனம், வழங்கிய வேறு வண்ண சீருடை தங்களுக்கு நெருடலாக இருப்பதாக இந்திய கிரிக்கெட் வீரர்கள், பிசிசிஐயிடம் புகார் அளித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

2005ம் ஆண்டு முதல், இந்திய கிரிக்கெட் அணிக்கான சீருடைகளையும், பயிற்சியின்போது அணியும் ஆடைகளையும் சப்ளை செய்து வருகிறது, 'நைக்' நிறுவனம்.

வீரர்கள் வலைப் பயிற்சியில் ஈடுபடும்போது, நீல வண்ண சட்டையும், கருப்பு அல்லது நீல வண்ண ஷாட்ஸ் அல்லது பேண்ட்டும் வழங்கிவந்தது நைக்.

வேறு வண்ணம்

வேறு வண்ணம்

இந்நிலையில், உலக கோப்பை டி20 கிரிக்கெட்டுக்கான இந்திய அணியின் பயிற்சிக்கு, வேறு வண்ணத்தில் சீருடையை சப்ளை செய்துள்ளது நைக்.

க்ரே கலர் பேண்ட்

க்ரே கலர் பேண்ட்

இந்திய வீரர்கள், பயிற்சியின்போது உடுத்திக்கொள்ள, சாம்பல் நிற (க்ரே) டிராக் பேண்ட் மற்றும் ஷாட்ஸ்களை வழங்கியுள்ளது நைக். இதுவரை நீல வண்ணத்தை உடுத்து ஆடிய வீரர்களுக்கு சாம்பல் கலர் பிடிக்கவில்லையாம்.

அதிருப்தி

அதிருப்தி

கலர் மாற்றப்பட்டது தங்களுக்கு அதிருப்தியளிப்பதாக பிசிசிஐயிடம் வீரர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலர் ஆடையை போட்டு பயிற்சி எடுப்பது மனதுக்கு பிடிக்கவில்லை, நெருடலாக உள்ளது என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 போட்டிகளில் தோல்வி

2 போட்டிகளில் தோல்வி

ஆடையின் வண்ணத்தை மாற்றியபிறகு, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த பயிற்சி ஆட்டம் மற்றும், நியூசிலாந்துக்கு எதிரான சூப்பர்-10 சுற்றின் முதல் ஆட்டம் ஆகியவற்றில் அடுத்தடுத்து இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது.

மாற்றுங்கப்பா

மாற்றுங்கப்பா

இந்திய அணியின் தோல்விகளுக்கு அணி வீரர்கள் மனதை சீருடை வண்ணம் கலைத்துள்ளதுதான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நடப்பு 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியின் சீருடை வண்ணத்திலும் லேசான மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது, எனினும், அதுகுறித்து எந்த புகாரும் எழவில்லை.

Story first published: Thursday, March 17, 2016, 15:04 [IST]
Other articles published on Mar 17, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+