KXIP vs DC : முதல்ல விக்கெட்டுகள்… அப்புறம் கொஞ்சம் ரன்கள்.. ஒரு வழியாக 166 ரன்களை எடுத்த பஞ்சாப்
சண்டிகர்:டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி தொடக்க விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போதிலும் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்துள்ளது.
சண்டிகரில் நடைபெறும் ஐபிஎல் தொடர் 13வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் டாஸ் வென்று முதலில் பஞ்சாப் அணியை பேட் செய்ய அழைத்துள்ளது.
பஞ்சாப் அணியில் அதிர்ச்சிகரமாக கிறிஸ் கெய்ல் இல்லை, அதே போல் பவுலர் ஆண்ட்ரூ டையும் இல்லை. டெல்லி கேப்பிடல்ஸ் அணி அமித் மிஸ்ராவுக்கு பதில் அவேஷ் கான் என்பவரை அணியில் சேர்த்துள்ளது.

சொதப்பல் ஆட்டம்
இதையடுத்து, பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ராகுலும், மயங்க் அகர்வாலும் களம் இறங்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஜோடி தொடக்கி வைத்த சொதப்பல்... அடுத்து வந்த வீரர்களையும் பாடாய்படுத்தியது.

அடுத்தடுத்து விக்கெட்டுகள்
அணியின் ஸ்கோர் 15 ரன்களாக இருந்த போது ராகுல் மோரிஸ் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு.. கர்ரன் அகர்வாலுடன் கைகோர்த்தார். ஆனால் நீண்ட நேரம் இந்த ஜோடி நிலைக்கவில்லை. ஸ்கோர் 36 என்றிருந்த போது, கர்ர்ன் வெளியேறினார். அப்போது சர்பிராஸ் கான் அடுத்த பேட்ஸ்மெனாக உள்ளே வந்தார்.

மில்லரின் முயற்சி
தடுமாறிக் கொண்டிருந்த அகர்வாலும் நடையை கட்ட 7 ஓவர்களில் 58 ரன்களை மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அதன்பின்னர், சர்பிராஸ் கானும், மில்லரும் அணியை தூக்கி நிறுத்த முயற்சித்தனர்.

அபார ஆட்டம்
இருவரும் இணைந்து பந்துகளை அடித்து விரட்டினர். சர்பிராஸ்கான் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மில்லருடன் மன்தீப் சிங் கைகோர்த்தார். நன்றாக ஆடிக் கொண்டிருந்த மில்லர் அணியின் ஸ்கோர் 137 ஆக இருந்தபோது மோரிஸ் பந்தில் வீழ்ந்தார்.

166 ரன்கள் குவித்த பஞ்சாப்
அவர் எடுத்த ரன்கள் 43. இது தான் பஞ்சாப் அணியில் ஒரு நபர் எடுத்த அதிக பட்ச ஸ்கோராகும். அதன்பிறகு.. மன்தீப் சிங்கை தவிர பின்வரிசை வீரர்கள் யாரும் பெரிதாக ஜொலிக்கவில்லை. அவர் மட்டும் 29 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது.


Click it and Unblock the Notifications