கடைசி ஒருநாள் போட்டியில் ஆட களமிறங்கிய கிளார்க்கிற்கு ரசிகர்கள் ஆரவார வரவேற்பு
மெல்போர்ன்: ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் பேட் செய்ய மைதானத்திற்கு வந்தபோது, ரசிகர்கள் எழுந்து நின்று கை தட்டி அவரை வரவேற்றனர்.
ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டன் மைக்கேல் கிளார்க், உலக கோப்பை பைனலுடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார்.

244 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கிளார்க் 7,907 ரன்களை 44.42 என்ற சராசரியில் எடுத்துள்ளார். இதில் 8 சதங்களும் 57 அரைசதங்களும் அடங்கும். 73 போட்டிகளில் கிளார்க்கின் தலைமைத்துவத்தில் ஆஸ்திரேலியா 49 போட்டிகளில் வென்றுள்ளது.
இந்நிலையில், வார்னர் அவுட் ஆனதும், களமிறங்கினார் கிளார்க். அவர் மைதானத்திற்குள் வந்தபோது ரசிகர்கள் எழுந்து நின்று, கரகோசத்துடன் அவரை வரவேற்று மரியாதை அளித்தனர்.
Story first published: Sunday, March 29, 2015, 14:19 [IST]
Other articles published on Mar 29, 2015


Click it and Unblock the Notifications