இந்தியா, பாக். போட்டியில் மழை விளையாடுமா? சட்டென மாறிய வானிலை...!! ரசிகர்கள் அதிர்ச்சி #INDvsPAK
மான்செஸ்டர்: இந்தியா, பாகிஸ்தான் போட்டியின் போது மழை நிச்சயம் என்று வானிலை மையம் கூறியுள்ளதால், மழைக்கு நடுவே தான் போட்டி நடக்கும் என்பது உறுதியாகி விட்டது. சட்டென மாறிய வானிலையால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
உலகமே எதிர்பார்க்கும் ஒரே போட்டி... அது இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டி. சாதாரணமாக சந்தித்து கொண்டாலே ஆக்ரோஷம். அதிலும் உலக கோப்பை என்றாலே சொல்ல வேண்டாம். வீரர்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் டென்ஷனில் உள்ளனர்.
அனைவரும் காத்துகிடக்கும் இந்தியா, பாகிஸ்தான் போட்டி மான்செஸ்டரில் இன்று நடக்கிறது. உலகம் முழுவதிலும் போட்டியை பற்றி பேசாமல், மழையை பற்றியே ரசிகர்கள் பேசும் ஒரே போட்டி என்றால் அது இதுவாக தான் இருக்கும்.

மழை பெய்கிறது
ஏன் என்றால் கடந்த சில நாட்களாக, இங்கிலாந்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருவகிறது. இன்றும் மழை குறுக்கீடு அதிகம் இருக்கும் என தெரிகிறது. வானிலை மைய முன் அறிவிப்பும் அதை தான் சொல்கிறது. அதாவது, இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் ஞாயிறன்று நிச்சயம் மழை இருக்கும்.

போட்டி நேரத்தில் மழை
தொடர் மழை இருக்காது, மாறாக, இடையிடையே விட்டு, விட்டு பெய்யும் என்று சொல்லப் பட்டிருக்கிறது. இன்னும் சற்றே விளக்கமாக கூற வேண்டும் என்றால், போட்டி நடக்கும் நேரங்களில் தான் மழையே என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதனால், ஸ்பான்சர் நிறுவனங்களும், ஸ்டார் நிறுவனமும் சற்றே கலங்கித் தான் போயிருக்கின்றன.

வானிலை நிலவரம் என்ன?
போட்டி நடைபெறும் நேரங்களில் எல்லாம் அதிக மழை கன்பார்ம் என்றும், குறிப்பாக மதியம் மற்றும் மாலை நேரங்களில் மழை வெளுக்கும் என்ற வானிலை அறிவிப்பு எக்கச்சக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மழைக்கு இடையே தான் போட்டி என்பதால், டக் வொர்த் லீவிஸ் விதி இன்று நிச்சயம் பயன்படுத்தப்படும் என்றும் தெரிகிறது.

நல்ல அடித்தளம் அவசியம்
வானிலை எப்படி இருந்தாலும், உலக கோப்பை தொடரில் இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக மோதிய 6 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்திய அணியை பொறுத்த வரையில் 3 போட்டியில் 2ல் வென்றுள்ளது. ரோகித்துடன் களமிறங்க ராகுலுக்கு இறங்க வாய்ப்பு உள்ளதால், நல்ல அடித்தளம் அமைக்க வேண்டும். பந்துவீச்சிலும் இந்திய அணி விட்டுவிடக்கூடாது.

மாறும் கணிப்பு
பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை கணிக்க முடியாத ஒன்றாக தான் இருக்கிறது. உலக கோப்பையில் இரண்டாவது மோசமான ஸ்கோரை பதிவு செய்தது. ஆனால், ஆச்சரியம் அளிக்கும் வகையில் அடுத்த போட்டியில் தங்களின் 2வது அதிக ஸ்கோரை பதிவு செய்து வெற்றிப்பாதைக்கு திரும்பியது.


Click it and Unblock the Notifications