நல்லவங்களுக்கு நல்ல விஷயங்கள் மட்டும்தான் நடக்கும்... நடராஜனுக்கு லஷ்மன் சர்ட்டிபிகேட்!
சென்னை : இந்திய வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் கடுமையான ஓவர்களை போடுவதாக முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவருடைய மன வலிமை மற்றும் தன்னம்பிக்கை மிகவும் கவர்ந்திழுக்கக்கூடிய விஷயங்களாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தன்னுடைய மகளின் பிறப்பையொட்டி நாடு திரும்பாத அவர், தன்னுடைய கனவுடன் ஆஸ்திரேலிய தொடரில் தொடர்ந்து இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பான பங்களிப்பு
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் சிறப்பான பங்களிப்பை அளித்து அனைவரது கவனத்தையும் கவர்ந்தார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் நடராஜன். நெட் பௌலராக இந்த தொடரில் பங்கேற்ற அவர், தொடர்ந்து அடுத்தடுத்து ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று சிறப்பான பௌலிங்கை வெளிப்படுத்தினார்.

நடராஜனுக்கு ஓய்வு
தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து நடராஜனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆயினும் குறைந்த ஓவர்கள் தொடர்களில் அவர் இடம்பெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையொட்டி நெட் பயிற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.

கவரும் விஷயங்கள்
இந்நிலையில் நடராஜனின் மனவலிமை மற்றும் தன்னம்பிக்கை அனைவரையும் கவர்ந்திழுக்கக்கூடிய விஷயங்களாக உள்ளதாக முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மன் பாராட்டு தெரிவித்துள்ளார். எதிரணிக்கு எதிராக அவர் கடுமையான ஓவர்களை போடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நல்ல விஷயங்கள்
நல்ல மனிதர்களுக்கு நல்ல விஷயங்கள்தான் நடக்கும் என்றும் அவர் அதற்கு தகுதியானவர்தான் என்றும் லஷ்மன் மேலும் கூறினார். அவர் தன்னுடைய மகளின் பிறப்பையொட்டியும் நாடு திரும்பாமல் ஆஸ்திரேலியாவில் தன்னுடைய கனவுடன் வாழ்ந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications