For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த மூத்த வீரரை தான் சும்மா வம்புக்கு இழுப்பார்கள்.. உண்மையை வெளியிட்ட கேப்டன் கோலி!

டெல்லி : இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, உமேஷ் யாதவ் உள்ளிட்டவர்கள் சேர்ந்தால், அவர்கள் மற்ற அனைவரையும் சிரிக்க வைத்துவிடுவார்கள் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இடையில் ஆரோக்கியமான போட்டி நிலவுவதாக தெரிவித்த கோலி, அவர்கள் ஒருவருக்கொருவர் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

வேகப்பந்து விச்சாளர்களுக்கிடையில் எந்த கோபமான வாக்குவாதமும் நடந்ததில்லை என்ற உண்மையை தெரிவித்துள்ள கோலி, அவர்களுக்குள் பொறாமை போன்றவை இல்லாததே அவர்களின் உண்மையான பலம் என்றும் கூறியுள்ளார்.

 சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் திறமையான பந்துவீச்சை அளித்து வருகிறார்கள். அவர்களுக்குகுள் ஒரு கெமிஸ்ட்ரி இருப்பதை எல்லாராலும் பார்க்க முடிகிறது.

 பெருமிதம் தெரிவிக்கும் கோலி

பெருமிதம் தெரிவிக்கும் கோலி

இந்திய வேகப்பந்து வீச்சாளர்களிடையே ஆரோக்கியமான போட்டி நிலவுவதாகவும் அவர்களுக்குள் எந்தவித பொறாமை உணர்வும் இல்லை என்றும் கேப்டன் விராத் கோலி தெரிவித்துள்ளார்.

 பௌலர்களின் வலிமை

பௌலர்களின் வலிமை

தங்களுக்குள் பொறாமை இன்றி வேகப்பந்து வீச்சாளர்கள் செயல்படுவதே அவர்களின் பலம் என்றும் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஒன்றாக இணைந்தால் அவர்கள் மற்றவர்களையும் தொடர்ந்து சிரிக்க வைத்து விடுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

 அதிக அடி கொடுப்பது பும்ரா

அதிக அடி கொடுப்பது பும்ரா

மூத்த பந்து விச்சாளராக உள்ள இஷாந்த் ஷர்மா தான் மற்றவர்களின் கேலி மற்றும் கிண்டல்களுக்கு அதிகமாக ஆளாவார் என்று குறிப்பிட்டுள்ள கோலி, ஊமை குசும்பன் போல அதிகமாக பேசாத ஜஸ்பிரீத் பும்ரா, சரியான நேரத்தில் காலை வாரி விடுவார் என்றும், புவனேஸ்வர் குமார் மற்றும் உமேஷ் அவருடன் சேர்ந்துக் கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, December 3, 2019, 18:54 [IST]
Other articles published on Dec 3, 2019
English summary
Senior most Ishant Sharma faces leg pulling many times - Kohli reveals
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X