Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WATCH: நியூசிலாந்திடம் இருந்து வெற்றியை பறித்த அந்த தருணம்! எந்த பைனலிலும் நடக்காத சம்பவம்

Recommended Video

WORLD CUP 2019 FINALS ENG VS NZ | முதல் முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து

லார்ட்ஸ் : இங்கிலாந்து பேட்டிங்கின் போது, 50வது ஓவரில் நிகழ்ந்த ஒரு துரதிருஷ்டவசமான சம்பவமே, நியூசிலாந்தின் ஒட்டு மொத்த சாம்பியன் கனவுக்கு வேட்டு வைத்திருக்கிறது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் மோதின. புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கியது இங்கிலாந்து.

பவுலிங் நெருக்கடி

பவுலிங் நெருக்கடி

அந்த அணிக்கு நியூசிலாந்து வீரர்கள் தங்களது துல்லிய மற்றும் நேர்த்தியான பந்துவீச்சு மூலம் கடும் நெருக்கடி கொடுத்தனர். கடைசி ஒரு ஒவருக்கு 15 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது. அந்த ஓவரின் முதல் 2 பந்துகளை அபாரமாக வீசி ரன்னே கொடுக்காமல் கட்டுப்படுத்தினார் போல்ட்.

9 ரன்கள், பவுண்டரி

9 ரன்கள், பவுண்டரி

3வது பந்தில் ஸ்டோக்ஸ் சிக்சர் தூக்க, கடைசி 3 பந்தில் 9 ரன்கள் தேவை என்றானது. அந்த பந்தில் ஸ்டோக்ஸ் 2 ரன்கள் அடித்தார். 2வது ரன் ஓடி முடிக்கும் போது குப்தில் வீசிய த்ரோவில் பந்து நேராக வந்து ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு பவுண்டரிக்கு சென்றது.

6 ரன்கள் கிடைத்தன

6 ரன்கள் கிடைத்தன

ஸ்டோக்ஸ் வேண்டுமென்றே பந்தை தடுக்காத காரணத்தால் அவர்கள் ஓடிய 2 ரன்கள், அந்த எதிர்பாராத பவுண்டரியையும் சேர்த்து 6 ரன்கள் வழங்கப்பட்டன. கடைசி 2 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட, ஆட்டம் டையில் முடிந்தது.

இங்கிலாந்து உலக சாம்பியன்

இங்கிலாந்து உலக சாம்பியன்

இதனையடுத்து வீசப்பட்ட சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 15 ரன்கள் எடுத்தது. 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய நியூசிலாந்து, 15 ரன்களே எடுத்ததால் சூப்பர் ஓவரின் விதிமுறைப் படி அதிக பவுண்டரி அடித்த இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

உற்சாக கொண்டாட்டம்

உற்சாக கொண்டாட்டம்

இதன் மூலம் கிரிக்கெட்டை உலகிற்கே அறிமுகப்படுத்திய இங்கிலாந்து அணி முதன்முறையாக உலக கோப்பையை இந்த முறை வென்று அசத்தியுள்ளது. இந்த வெற்றியை அந்த நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

Story first published: Monday, July 15, 2019, 2:47 [IST]
Other articles published on Jul 15, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+