Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இளம் வீரர்களுடன் உற்சாக கொண்டாட்டம் - தேவையான நேரத்தில் கிடைத்த கொண்டாட்டம் -விராட் கோலி

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, கே.எல்.ராகுல், கேதர் ஜாதவ், யுஸ்வேந்திர சஹால் உள்ளிட்டவர்களுடன் மதிய வேளையில் உற்சாகமாக பொழுதை கழித்து அந்த புகைப்படங்களை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக இந்தியா மோதவுள்ள 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், இந்த கொண்டாட்டம் தேவைப்படுவதாகவும் அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் விராட் கோலி டக் அவுட் ஆகியிருந்தார். ஆயினும் அந்தப் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், வரும் 22ம் தேதி 3வது ஒருநாள் சர்வதேச போட்டி நடைபெறவுள்ளது.

ஒருநாள் சர்வதேச தொடர்

ஒருநாள் சர்வதேச தொடர்

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் ஒருநாள் சர்வதேச தொடர் நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் விசாகப்படடினத்தில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன் செய்துள்ளன.

கட்டாக்கில் 22ம் தேதி நடைபெறுகிறது

கட்டாக்கில் 22ம் தேதி நடைபெறுகிறது

இந்நிலையில் தொடரை இறுதி செய்யும் 3வது போட்டி கட்டாக்கில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முயற்சியில் இரு அணிகளுமே தீவிரம் காட்டி வருகின்றன.

சக வீரர்களுடன் உற்சாக கொண்டாட்டம்

சக வீரர்களுடன் உற்சாக கொண்டாட்டம்

3வது சர்வதேச ஒருநாள் போட்டி நாளை மறுதினம் நடைபெறவுள்ள நிலையில், கேப்டன் விராட் கோலி, சக வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, கே.எல். ராகுல், கேதர் ஜாதவ், யுஸ்வேந்திர சஹால், ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் மணீஷ் பாண்டே ஆகியோருடன் ஒருநாளை உற்சாகமாக கொண்டாடியுள்ளார்.

தேவைப்படும் உற்சாகம்

இந்த கொண்டாட்டம் குறித்து புகைப்படங்களுடன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள விராட் கோலி, இந்த கொண்டாட்டம் தற்போது தங்களுக்கு தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இறுதி ஒருநாள் சர்வதேச போட்டி...

இறுதி ஒருநாள் சர்வதேச போட்டி...

ஐபிஎல் 2020க்கான ஏலம் ஒருபுறம் விறுவிறுப்புடன் நடந்து முடிந்துள்ள நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இறுதி ஒருநாள் போட்டியும் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இவற்றை கொண்டாடும்வகையில் விராட், சக வீரர்களுடன் மகிழ்ச்சியாக செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, December 20, 2019, 18:31 [IST]
Other articles published on Dec 20, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+