Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிசிசிஐயின் கசப்பான முடிவு.. ரவி சாஸ்திரி தொடங்கி கோலி வரை அதிர்ச்சி.. என்ன பாதிப்பை ஏற்படுத்துமோ!

Recommended Video

BCCI New Decision : பிசிசிஐயின் கசப்பான முடிவு.. என்ன பாதிப்பை ஏற்படுத்துமோ!- வீடியோ

லண்டன்: இந்திய அணியின் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதில் நிறைய கட்டுப்பாடுகளை பிசிசிஐ விதித்து இருக்கிறது. இதில் செய்யப்பட்டு இருக்கும் முக்கியமான சில மாற்றங்கள் சில பின் விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளராக பாரத் அருண், பீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதர் ஆகியோர் இருக்கிறார்கள். இவர்களுக்கு பதிலாக தற்போது பிசிசிஐ புதிய பயிற்சியாளரை நியமிக்கும் பணியில் இறங்கி உள்ளது.

உலகக் கோப்பையோடு இவர்களின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. தற்போது கூடுதலாக 2 மாதத்திற்கு இவர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

என்ன செய்தார்

என்ன செய்தார்

ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட போது, தனக்கு தேவையான துணை பயிற்சியாளர்களை அவரே நியமித்துக் கொண்டார். அதாவது பவுலிங் பயிற்சியாளராக பாரத் அருண், பீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதர், பேட்டிங் கோச் சஞ்சய் பங்கர் ஆகியோரை நியமித்தார்.

ஆனால் இப்போது

ஆனால் இப்போது

ஆனால் இப்போது இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்ய முன்னாள் கேப்டன் கபில் தேவ் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கபில் தேவ், முன்னாள் இந்திய வீரர் அனுஷ்மான் கேக்வாட், முன்னாள் பெண்கள் அணி கேப்டன் ஷாந்தா ரங்கசாமி ஆகியோர் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வார்கள்.

இல்லை

இல்லை

அதே சமயம் இந்த தேர்வுக்குழு துணை பயிற்சியாளர்களை தேர்வு செய்யாது. அதேபோல் துணை பயிற்சியாளர்களை இந்த முறை நியமிக்கப்பட உள்ள தலைமை பயிற்சியாளரும் நியமிக்க மாட்டார். சாஸ்திரி நியமித்தது போல துணை பயிற்சியாளர்களை புதிய தலைமை பயிற்சியாளரால் நியமிக்க முடியாது.

யார் செய்வார்

யார் செய்வார்

துணை பயிற்சியாளர்களை பிசிசிஐ மூத்த நிர்வாகிகள் நேரடியாக தேர்வு செய்ய இருக்கிறார்கள். தேர்வுகள் எதையும் வைக்காமல் நேரடியாக துணை பயிற்சியாளரை நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்து உள்ளது. இதுதான் இந்திய அணிக்கு சிக்கலாக மாற வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.பிசிசிஐயின் இந்த முடிவு மொத்த அணிக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏன் சிக்கல்

ஏன் சிக்கல்

பொதுவாக தலைமை பயிற்சியாளர், தனக்கு ஏற்ற துணை பயிற்சியாளரை நியமிப்பதே அணிக்குள் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்தும். பயிற்சியின் போதும் அணிக்கு உதவும். ஆனால் இந்த முறை இந்திய அணியில் அப்படி நடக்க போவது இல்லை. இது பயிற்சியின் போது துணை பயிற்சியாளருக்கு பயிற்சியாளருக்கும் இடையில் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Story first published: Thursday, July 18, 2019, 11:16 [IST]
Other articles published on Jul 18, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+