கட்டிய கையோடு பேட்டை கையில் பிடித்த சஞ்சிதா.. அடேங்கப்பா பொண்ணு.. அசத்திடுச்சே!
ரங்க்பூர் : வங்கதேசத்தின் கிரிக்கெட் வீராங்கனை சஞ்சிதா இஸ்லாம் சமீபத்தில் பர்ஸ்ட் கிளாஸ் ரங்க்பூர் கிரிக்கெட் வீரர் மிம் மொசாதீக்குடன் திருமணம் செய்துக் கொண்டார்.
இவர்கள் திருமணம் என்னவோ பாரம்பரிய முறைப்படி தான் நடந்தது. ஆனால் போட்டோஷுட் தான் வித்தியாசமாக மைதானத்தில் நடந்தது.
கையில் கிரிக்கெட் பேட், மணப்பெண் கோலம் இவற்றுடன் போட்டோவிற்கு போஸ் கொடுத்திருந்தார் சஞ்சிதா. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2014 முதல் ஆட்டம்
வங்க தேசத்தின் கிரிக்கெட் வீராங்கனை சஞ்சிதா இஸ்லாம் கடந்த 2014 முதல் வங்கதேச அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 14 ஒருநாள் போட்டிகளிலும் 32 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ள இவர், கடந்த ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் அந்த அணியின் வெற்றி அணியிலும் இடம்பெற்றுள்ளார்.

புதுவித போட்டோ ஷூட்
இந்த நிலையில் கடந்த வாரத்தில் அவருக்கு பர்ஸ்ட் கிளாஸ் ரங்க்பூர் டிவிஷன் கிரிக்கெட் வீரர் மிம் மொசாதீக்குடன் திருமணம் நடந்துள்ளது. திருமணம் என்னவோ பாரம்பரிய முறைப்படிதான் நடந்தது. ஆனால் திருமணம் முடிந்தவுடன் கையில் பேட்டுடன் போட்டோஷூட்டுக்கு கிளம்பிட்டாங்க சஞ்சிதா.

சஞ்சிதா திருமண போட்டோஷூட்
இப்பல்லாம் போட்டோஷூட் என்பது மிகவும் கற்பனையோட எடுக்கப்பட்டு வருகிறது. காலம் முழுவதும் நாம் வைத்து ரசிக்கும் நமது திருமண போட்டோக்களை விதவிதமான கற்பனை வளத்துடன் தற்போது எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நாங்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன என கேள்வியுடன் களமிறங்கியுள்ளார் சஞ்சிதா.

பாரம்பரிய உடையுடன் போஸ்
கையில் பேட்டுடன் பாரம்பரிய திருமண உடையுடன் இவர் கொடுத்துள்ள போஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. இதை இஎஸ்பிஎன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேலும் பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் புது மணப்பெண்ணிற்கு பகிர்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications