Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உண்மையான கிறிஸ் கெயில்... தன்னுடைய தந்தையின் பிறந்தநாளில் உண்மையை போட்டுடைத்த கெயில்!

ஜமாய்க்கா : மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கிறிஸ் கெயில் தன்னுடைய தந்தையின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார்.

இதையொட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள், வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மேலும் உண்மையான கிறிஸ் கெயில் என்று தன்னுடைய தந்தையை குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ் கெயில் அபாரம்

கிறிஸ் கெயில் அபாரம்

மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் மற்றும் ஐபிஎல்லில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெயில். தன்னுடைய நாட்டிற்காக சிறப்பான பல சாதனைகளை புரிந்துள்ளார். கெயில், ஐபிஎல் 2020 சீசனில் 7 போட்டிகளில் மட்டுமே பங்கேற்று 288 ரன்களை அடித்துள்ளார். மேலும் 3 அரைசதங்களை அடித்து தன்னுடைய அணியை பல முக்கிய போட்டிகளில் வெற்றி பெற செய்தார்.

முக்கிய தொடர்களில் ஆட்டம்

முக்கிய தொடர்களில் ஆட்டம்

டி20 வடிவத்தில் சிறப்பான வீரராக கருதப்படும் கெயில், தொடர்ந்து ஐபிஎல், பிக் பாஷ் லீக், டி20 பிளாஸ்ட், கரீபியன் பிரீமியர் லீக், பங்களாதேஷ் பிரீமியர் லீக் உள்ளிட்ட தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறார். 41 வயதான போதும் கிரிக்கெட்டில் அவரது ஆர்வமும் திறமையும் சிறிதும் குறையவில்லை.

22 சதங்கள்... 1001 சிக்ஸ்கள்

22 சதங்கள்... 1001 சிக்ஸ்கள்

டி20 வடிவத்தில் மட்டுமே 13,584 ரன்களை 411 போட்டிகளில் விளையாடி பெற்றுள்ளார். டி20 போட்டிகளில் இதுவரை 22 சதங்களை அடித்துள்ள கெயில், 1001 சிக்ஸ்களை அடித்து சாதனை புரிந்துள்ளார். கடந்த 19 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவரும் கெயில், 301 ஒருநாள் போட்டிகளிலும் 103 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

உண்மையான கெயில்

உண்மையான கெயில்

இந்நிலையில் தன்னுடைய தந்தையின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார் கெயில். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், உண்மையான கெயில் என்று தனது தந்தைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, November 17, 2020, 10:48 [IST]
Other articles published on Nov 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+